• Jul 27 2024

கிரிக்கெட்டால் கொழும்பு அரசியலில் குழப்பம்! கடும் விசனத்தில் ஜனாதிபதி..! samugammedia

Chithra / Nov 6th 2023, 12:25 pm
image

Advertisement


இலங்கை கிரிக்கெட் சபைக்கான இடைக்கால குழு நியமனம் தொடர்பில் அரசாங்கத்திற்கோ அல்லது தமக்கோ எதுவும் தெரியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார். 

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இடைக்கால கிரிக்கெட் குழுவொன்றை நியமித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் சந்திப்பிலிருந்த அமைச்சர்கள் சிலர் கேள்வி எழுப்பிய போதே  ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இடைக்கால கிரிக்கெட் குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் கூட அனுமதிக்காக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரியப்படுத்தப்படவில்லை. 

இன்று திங்கட்கிழமை (06) மாலை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இந்த விடயம் குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என்று அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். 

கிரிக்கெட் போன்ற நிறுவனங்களுக்கு இடைக்கால குழுவை நியமிக்கும் போது ஜனாதிபதிக்கு அறிவிப்பட வேண்டும். 

ஆனால் இம்முறை விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த விடயத்தை ஜனாதிபதிக்கு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

 


கிரிக்கெட்டால் கொழும்பு அரசியலில் குழப்பம் கடும் விசனத்தில் ஜனாதிபதி. samugammedia இலங்கை கிரிக்கெட் சபைக்கான இடைக்கால குழு நியமனம் தொடர்பில் அரசாங்கத்திற்கோ அல்லது தமக்கோ எதுவும் தெரியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இடைக்கால கிரிக்கெட் குழுவொன்றை நியமித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் சந்திப்பிலிருந்த அமைச்சர்கள் சிலர் கேள்வி எழுப்பிய போதே  ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இடைக்கால கிரிக்கெட் குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் கூட அனுமதிக்காக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரியப்படுத்தப்படவில்லை. இன்று திங்கட்கிழமை (06) மாலை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இந்த விடயம் குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என்று அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். கிரிக்கெட் போன்ற நிறுவனங்களுக்கு இடைக்கால குழுவை நியமிக்கும் போது ஜனாதிபதிக்கு அறிவிப்பட வேண்டும். ஆனால் இம்முறை விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த விடயத்தை ஜனாதிபதிக்கு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement