வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் நினைவேந்தல்களை நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள் என இலங்கை அறிவித்துள்ளது.
வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 29 ஆவது அமர்வு கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகி நிலையில், இலங்கை தொடர்பான விவகாரம் நேற்று முன்தினம் ஆராயப்பட்டது.
இதன்போது, இலங்கை சார்பில் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தலைமையிலான தூதுக்குழு கலந்துகொண்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு எத்தனை இழப்பீட்டுப் பணம் வழங்கப்பட்டுள்ளது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குழு நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அனைத்துக் குடிமக்களிடையேயும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு விரிவான இழப்பீட்டுத் திட்டம் உள்ளதா? காணாமல் போனவர்களின் நினைவாக ஒரு தேசிய தினம் உருவாக்கப்படுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
2024 ஆம் ஆண்டில் 5,000 குடும்பங்களுக்கு ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டதில், மீதமுள்ள நிதியைப் பயன்படுத்த என்ன திட்டங்கள் உள்ளன?
ஒரு நபர் உண்மையிலேயே இறந்துவிட்டார் என்பது உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதை அரசு எவ்வாறு உறுதிப்படுத்துகிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இறப்புச் சான்றிதழ்களை இல்லாமைச் சான்றிதழ்களாக மாற்றுவதற்கான நடைமுறைகள் என்ன? சான்றிதழ்களைப் புதுப்பிப்பதற்கான தேவைகள் என்ன? என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குழு நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள இலங்கைத் தூதுக்குழு,
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நினைவேந்தல்களை நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், அவை பயங்கரவாத அமைப்புகளைப் போற்றுவதாக இருக்கக் கூடாது என்று அறிவித்துள்ளது.
இலங்கை ஒரு தேசிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தைக் கொண்டாடுகிறது. இதில் மனித உரிமைப் பாதுகாவலர்களும் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களும் உரையாற்ற அழைக்கப்படுகிறார்கள்.
இல்லாமைச் சான்றிதழ்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தின் பேரிலேயே வழங்கப்படுகின்றன. அது கட்டாயப்படுத்தி வழங்கப்படவில்லை என்றும் இலங்கை அறிவித்துள்ளது.
குடும்பங்கள் இல்லாமைச் சான்றிதழ்களை இரத்து செய்து இறப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இலங்கை தூதுக்கு அறிவித்துள்ளது.
இழப்பீட்டு அலுவலகம் 4,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவியை வழங்கியுள்ளதாகவும் இலங்கை தூதுக்குழு அறிவித்துள்ளது.
நினைவேந்தல்களுக்கு அனுமதியுண்டு: அவை பயங்கரவாத அமைப்புகளைப் போற்றுவதாக இருக்கக்கூடாது - இலங்கை அரசு கருத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் நினைவேந்தல்களை நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள் என இலங்கை அறிவித்துள்ளது. வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 29 ஆவது அமர்வு கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகி நிலையில், இலங்கை தொடர்பான விவகாரம் நேற்று முன்தினம் ஆராயப்பட்டது. இதன்போது, இலங்கை சார்பில் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தலைமையிலான தூதுக்குழு கலந்துகொண்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு எத்தனை இழப்பீட்டுப் பணம் வழங்கப்பட்டுள்ளது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குழு நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அனைத்துக் குடிமக்களிடையேயும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு விரிவான இழப்பீட்டுத் திட்டம் உள்ளதா காணாமல் போனவர்களின் நினைவாக ஒரு தேசிய தினம் உருவாக்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். 2024 ஆம் ஆண்டில் 5,000 குடும்பங்களுக்கு ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டதில், மீதமுள்ள நிதியைப் பயன்படுத்த என்ன திட்டங்கள் உள்ளன ஒரு நபர் உண்மையிலேயே இறந்துவிட்டார் என்பது உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதை அரசு எவ்வாறு உறுதிப்படுத்துகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இறப்புச் சான்றிதழ்களை இல்லாமைச் சான்றிதழ்களாக மாற்றுவதற்கான நடைமுறைகள் என்ன சான்றிதழ்களைப் புதுப்பிப்பதற்கான தேவைகள் என்ன என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குழு நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள இலங்கைத் தூதுக்குழு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நினைவேந்தல்களை நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், அவை பயங்கரவாத அமைப்புகளைப் போற்றுவதாக இருக்கக் கூடாது என்று அறிவித்துள்ளது. இலங்கை ஒரு தேசிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தைக் கொண்டாடுகிறது. இதில் மனித உரிமைப் பாதுகாவலர்களும் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களும் உரையாற்ற அழைக்கப்படுகிறார்கள். இல்லாமைச் சான்றிதழ்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தின் பேரிலேயே வழங்கப்படுகின்றன. அது கட்டாயப்படுத்தி வழங்கப்படவில்லை என்றும் இலங்கை அறிவித்துள்ளது. குடும்பங்கள் இல்லாமைச் சான்றிதழ்களை இரத்து செய்து இறப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இலங்கை தூதுக்கு அறிவித்துள்ளது. இழப்பீட்டு அலுவலகம் 4,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவியை வழங்கியுள்ளதாகவும் இலங்கை தூதுக்குழு அறிவித்துள்ளது.