• Sep 30 2025

இலங்கையில் ஆடிப் பாடிக் கொண்டாடிய வெளிநாட்டுப் பயணிகள்;உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பலத்த வரவேற்பு

Chithra / Sep 28th 2025, 2:59 pm
image

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நானுஓயா ரயில் நிலையத்தில் நேற்று விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத் துறையின் முக்கிய பங்கை வலியுறுத்தும் வகையில், நானுஓயா சுற்றுலா சாரதிகள் சங்கத்தினர் இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர். 

நிகழ்வின் ஆரம்பமாக, விசேட அதிதிகளுக்கு மலர் மாலைகள் அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து, நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் இருந்து நானுஓயா  ரயில் நிலையம் வரை பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்தியக் குழுவினரின் இசை முழங்க உற்சாகமான அணிவகுப்பு நடைபெற்றது. 

இந்த விழாவுக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்நாட்டவர்களுடன் மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

அத்துடன், பாடசாலை மாணவர்களின் நடனங்கள் அரங்கேற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து, பயணிகளுக்கு உணவு, சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது. 


இதேவேளை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளால், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் நேற்று உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் திருமதி அனுஷா தமயந்தி, நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது,  நாட்டுக்கு வருகைத்தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அன்புடன் வரவேற்கப்பட்டு, கேக் மற்றும் தேயிலை அடங்கிய பொதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

அதேநேரம், மலையக மற்றும் நாட்டுப்புற நடனக் கலைஞர்கள் குழுவும், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்காக நடனங்களை நிகழ்த்தினர்.


இலங்கையில் ஆடிப் பாடிக் கொண்டாடிய வெளிநாட்டுப் பயணிகள்;உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பலத்த வரவேற்பு உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நானுஓயா ரயில் நிலையத்தில் நேற்று விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத் துறையின் முக்கிய பங்கை வலியுறுத்தும் வகையில், நானுஓயா சுற்றுலா சாரதிகள் சங்கத்தினர் இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வின் ஆரம்பமாக, விசேட அதிதிகளுக்கு மலர் மாலைகள் அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் இருந்து நானுஓயா  ரயில் நிலையம் வரை பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்தியக் குழுவினரின் இசை முழங்க உற்சாகமான அணிவகுப்பு நடைபெற்றது. இந்த விழாவுக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்நாட்டவர்களுடன் மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.அத்துடன், பாடசாலை மாணவர்களின் நடனங்கள் அரங்கேற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து, பயணிகளுக்கு உணவு, சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது. இதேவேளை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளால், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் நேற்று உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் திருமதி அனுஷா தமயந்தி, நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.இதன்போது,  நாட்டுக்கு வருகைத்தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அன்புடன் வரவேற்கப்பட்டு, கேக் மற்றும் தேயிலை அடங்கிய பொதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.அதேநேரம், மலையக மற்றும் நாட்டுப்புற நடனக் கலைஞர்கள் குழுவும், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்காக நடனங்களை நிகழ்த்தினர்.

Advertisement

Advertisement

Advertisement