• Nov 25 2024

திருமலையில் காணி அபகரிப்புக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு..!

Sharmi / Oct 1st 2024, 11:29 am
image

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வெல்வேரி கிராமத்தினை சேர்ந்த பொதுமக்கள் (30) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் வசித்துவந்த 31 குடும்பத்தினர்களது 42 ஏக்கர் குடியிருப்புக் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில் , அந்த காணிகளில் 35 ஏக்கர் காணிப்பகுதியானது பெரும்பான்மையினத்தினை சேர்ந்த  தனி  நபர் ஒருவருக்கு அரசினால் குத்தகை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பாக முறையிடுவதற்காக வருகை தந்திருந்தனர்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக குறித்த கிராமத்தவர்கள் இடம்பெயர்ந்திருந்த நிலையில் அவர்கள் மீளக் குடியேற முட்பட்டபோது அவர்களது காணிப்பகுதிகளை அரசானது கையகப்படுத்தியதோடு யுத்தம் முடினந்து பல வருடங்கள் ஆகிய நிலையில் குறித்த காணிகளில் இற்றை வரை மீளக்குடியேற முடியாதிருப்பதன் காரணமாக அது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடுவதற்கு வந்திருந்தனர். 

1983ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின் போது தாம் இடம்பெயர்ந்து மீளக் குடியமர்ந்ததன் பின்னர் 90களிலும் இடம் பெயர நேரிட்டதாகவும் அதன் பின்னராக அவர்களது வீடுகள் இருந்த பகுதிகளில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்ததால் அப்போது மீளவும் குடியேற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

அதன் பின்னராக வனஜீவராசிகள் திணைக்களம் குறித்த பகுதியில் எல்லையிட்டதன் பின்னராக தற்போது அங்கு செல்ல முடியாத நிலை நெற்பட்டிருந்ததுடன் அவ்வாறு எல்லையிடப்பட்ட பகுதிகள் அரச இயந்திரங்கள் மூலமாக பெரும்பான்மையினத்தினை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் அது தொடர்பில் பலதரப்பட்ட மட்டங்களில் முறையிடப்பட்டிந்த போதிலும் தகுந்த பதில் கிடைக்கப்பெறாத நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட வருகை தந்திருப்பதாகவும் இதன்போது அவர்கள் குறிப்பிட்டனர்.


திருமலையில் காணி அபகரிப்புக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு. திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வெல்வேரி கிராமத்தினை சேர்ந்த பொதுமக்கள் (30) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.குறித்த பகுதியில் வசித்துவந்த 31 குடும்பத்தினர்களது 42 ஏக்கர் குடியிருப்புக் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில் , அந்த காணிகளில் 35 ஏக்கர் காணிப்பகுதியானது பெரும்பான்மையினத்தினை சேர்ந்த  தனி  நபர் ஒருவருக்கு அரசினால் குத்தகை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பாக முறையிடுவதற்காக வருகை தந்திருந்தனர்.உள்நாட்டு யுத்தம் காரணமாக குறித்த கிராமத்தவர்கள் இடம்பெயர்ந்திருந்த நிலையில் அவர்கள் மீளக் குடியேற முட்பட்டபோது அவர்களது காணிப்பகுதிகளை அரசானது கையகப்படுத்தியதோடு யுத்தம் முடினந்து பல வருடங்கள் ஆகிய நிலையில் குறித்த காணிகளில் இற்றை வரை மீளக்குடியேற முடியாதிருப்பதன் காரணமாக அது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடுவதற்கு வந்திருந்தனர். 1983ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின் போது தாம் இடம்பெயர்ந்து மீளக் குடியமர்ந்ததன் பின்னர் 90களிலும் இடம் பெயர நேரிட்டதாகவும் அதன் பின்னராக அவர்களது வீடுகள் இருந்த பகுதிகளில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்ததால் அப்போது மீளவும் குடியேற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.அதன் பின்னராக வனஜீவராசிகள் திணைக்களம் குறித்த பகுதியில் எல்லையிட்டதன் பின்னராக தற்போது அங்கு செல்ல முடியாத நிலை நெற்பட்டிருந்ததுடன் அவ்வாறு எல்லையிடப்பட்ட பகுதிகள் அரச இயந்திரங்கள் மூலமாக பெரும்பான்மையினத்தினை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.மேலும் அது தொடர்பில் பலதரப்பட்ட மட்டங்களில் முறையிடப்பட்டிந்த போதிலும் தகுந்த பதில் கிடைக்கப்பெறாத நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட வருகை தந்திருப்பதாகவும் இதன்போது அவர்கள் குறிப்பிட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement