• May 02 2024

வவுனியாவில் காணி அபகரிப்புக்கு எதிராக பொலிஸ் அத்தியட்சரிடம் முறைப்பாடு!

Sharmi / Dec 28th 2022, 11:36 am
image

Advertisement

வவுனியா காத்தான்கோட்டம் கணேசபுரம் பகுதியில் கடந்த 28வருடங்களாக வசித்து வரும் ஒருவர் தனது வீட்டின் ஒரு பகுதியையும், இலக்கத்தையும் எனது வீட்டின் பின்புறத்தில் வசிப்பவர் அபகரித்து வருகின்றதாக தெரிவித்து வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாட்டு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

காத்தான்கோட்டம் மரக்காரம்பளை கணேசபுரம் பகுதியில் கடந்த 28வருடங்களாக வசித்து வருகின்றேன். எனது காணிக்கு பின்புறத்தில் வசிப்பவர் தனது இரண்டு பரப்புக்காணியை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்துள்ளார் எனினும் அவரின் காணிக்கும் ஒழுங்கை இல்லை இதனால் எனது காணியின் ஒரு பகுதியையே பயன்படுத்தி வருகின்றார். இவ்வாறான நிலையில் அவரால் பயன்படுத்தப்படும் பாதையையும் எனது வீட்டின் இலக்கத்தையும் அவர் பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. 

இது குறித்து நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டேன். பொலிசார் இரு தரப்பினரையும் அழைத்து எனது காணியை அபரிக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தும் அவர் தொடர்ந்தும் எனது காணியை பயன்படுத்துவதுடன் தொடர்ந்தும் எனது முகவரி இலக்கங்களையும் பயன்படுத்தி வருகின்றார்.

எனவே காணி அபகரிப்பு மற்றும் வீட்டின் இலக்கம் என்பன தொடர்ந்தும் அவரால் பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் காணி அபகரிப்புக்கு எதிராக பொலிஸ் அத்தியட்சரிடம் முறைப்பாடு வவுனியா காத்தான்கோட்டம் கணேசபுரம் பகுதியில் கடந்த 28வருடங்களாக வசித்து வரும் ஒருவர் தனது வீட்டின் ஒரு பகுதியையும், இலக்கத்தையும் எனது வீட்டின் பின்புறத்தில் வசிப்பவர் அபகரித்து வருகின்றதாக தெரிவித்து வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாட்டு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காத்தான்கோட்டம் மரக்காரம்பளை கணேசபுரம் பகுதியில் கடந்த 28வருடங்களாக வசித்து வருகின்றேன். எனது காணிக்கு பின்புறத்தில் வசிப்பவர் தனது இரண்டு பரப்புக்காணியை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்துள்ளார் எனினும் அவரின் காணிக்கும் ஒழுங்கை இல்லை இதனால் எனது காணியின் ஒரு பகுதியையே பயன்படுத்தி வருகின்றார். இவ்வாறான நிலையில் அவரால் பயன்படுத்தப்படும் பாதையையும் எனது வீட்டின் இலக்கத்தையும் அவர் பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டேன். பொலிசார் இரு தரப்பினரையும் அழைத்து எனது காணியை அபரிக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தும் அவர் தொடர்ந்தும் எனது காணியை பயன்படுத்துவதுடன் தொடர்ந்தும் எனது முகவரி இலக்கங்களையும் பயன்படுத்தி வருகின்றார்.எனவே காணி அபகரிப்பு மற்றும் வீட்டின் இலக்கம் என்பன தொடர்ந்தும் அவரால் பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement