• Nov 28 2024

சுதந்திர மக்கள் சபைக்குள் கருத்து மோதல்- அரசியல் வட்டார தகவல்கள்..! samugammedia

Tamil nila / Dec 14th 2023, 9:59 pm
image

சுதந்திர மக்கள் சபைக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, அந்த சபையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரால் இரு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியினால் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியுடன் உடன்படிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திர மக்கள் சபையில் இருந்து குறித்த கூட்டணியில் இணையும் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளதாகவும், பிரதித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம் இணை அழைப்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் கலாநிதி நாலக கொடஹேவா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தியினால் உருவாக்கப்படும் புதிய கூட்டணியுடன் இணையாதிருப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சுதந்திர மக்கள் சபைக்குள் கருத்து மோதல்- அரசியல் வட்டார தகவல்கள். samugammedia சுதந்திர மக்கள் சபைக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன்படி, அந்த சபையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரால் இரு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியினால் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியுடன் உடன்படிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சுதந்திர மக்கள் சபையில் இருந்து குறித்த கூட்டணியில் இணையும் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளதாகவும், பிரதித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அதேநேரம் இணை அழைப்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் கலாநிதி நாலக கொடஹேவா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எவ்வாறாயினும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தியினால் உருவாக்கப்படும் புதிய கூட்டணியுடன் இணையாதிருப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement