• May 18 2024

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தை திசை திருப்பி மழுங்கடிக்கச் செய்வதற்கு சதி- ராஜ்குமார் ஆதங்கம்!SamugamMedia

Sharmi / Mar 11th 2023, 10:10 am
image

Advertisement

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா நேற்று முன்தினம் வியாழக்கிழமை வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி போராட்டம் மேற்கொண்டு வரும் கொட்டகைக்கு சட்டவிரோதமாக மின்சார இணைப்பைப் பெற்றார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கைது தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் கூறுகையில்,

நாம் கடந்த 2ஆயிரத்து 210 நாள்களாக குறித்த கொட்டகையில் போராட்டத்தை நடத்தி வரு கின்றோம்.

இந்தக் கொட்டகைப் பகுதியில் மின்சாரத் தூணி.லிருந்து வீதி மின்விளக்கு ஒன்று பொருத்தப்பட் டுள்ளது. அதிலிருந்தே மின்சாரசபையால் எமக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதில் பழுதுகள் ஏற்பட்டபோதும் கூட இலங்கை மின்சாரசபையைச் சேர்ந்தவர்கள் வருகை தந்து அதனைச் சீரமைத்து தந்துள்ளனர்.

இந்த நிலையில் பொய்க்குற்றச்சாட்டை முன் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்தக் கைது சட்ட விரோதமானது. எமது போராட்டத்தை திசை திருப்பி மழுங்கடிக்கச் செய்வதற்கான சதிமுயற்சியே இதுவாகும் -என்றார்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தை திசை திருப்பி மழுங்கடிக்கச் செய்வதற்கு சதி- ராஜ்குமார் ஆதங்கம்SamugamMedia வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா நேற்று முன்தினம் வியாழக்கிழமை வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி போராட்டம் மேற்கொண்டு வரும் கொட்டகைக்கு சட்டவிரோதமாக மின்சார இணைப்பைப் பெற்றார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைது தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் கூறுகையில்,நாம் கடந்த 2ஆயிரத்து 210 நாள்களாக குறித்த கொட்டகையில் போராட்டத்தை நடத்தி வரு கின்றோம்.இந்தக் கொட்டகைப் பகுதியில் மின்சாரத் தூணி.லிருந்து வீதி மின்விளக்கு ஒன்று பொருத்தப்பட் டுள்ளது. அதிலிருந்தே மின்சாரசபையால் எமக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அதில் பழுதுகள் ஏற்பட்டபோதும் கூட இலங்கை மின்சாரசபையைச் சேர்ந்தவர்கள் வருகை தந்து அதனைச் சீரமைத்து தந்துள்ளனர்.இந்த நிலையில் பொய்க்குற்றச்சாட்டை முன் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்தக் கைது சட்ட விரோதமானது. எமது போராட்டத்தை திசை திருப்பி மழுங்கடிக்கச் செய்வதற்கான சதிமுயற்சியே இதுவாகும் -என்றார்.

Advertisement

Advertisement

Advertisement