• Sep 19 2024

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சர்ச்சைக்குரிய மரணங்கள் - காரணம் என்ன? samugammedia

Chithra / Aug 13th 2023, 9:10 am
image

Advertisement

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளரின் மரணத்துக்கு செப்டாசிடைம் (Ceftazidime) என்ற நோயெதிர்ப்பு மருந்தை செலுத்தியதால் ஏற்பட்ட ஒவ்வாமையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் உடற் பாகங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக சம்பந்தப்பட்ட ஆய்வு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் செப்டாசிடிம் (Ceftazidime) எனப்படும் நோயெதிர்ப்பு மருந்தின் பாவனை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.

குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததை அடுத்து அதன் பாவனையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 67 வயதுடைய ஒருவர் கடந்த 6 ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட தினத்திலிருந்து அவருக்கு நேற்றுமுன்தினம் வரை 10 தடவைகள் குறித்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 11வது முறையாக அவருக்கு செப்டாசிடிம் எனப்படும் குறித்த மருந்து செலுத்தப்பட்டதன் 5 நிமிடங்களின் பின்னர் அவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

இதேவேளை இதற்கு முன்னரும் இந்த மருந்தை செலுத்திய பின்னர் சில நோயாளர்கள் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குழுவொன்றை நியமித்தார்.

அதன் அறிக்கை அண்மையில் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டதுடன், அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய அந்த குழுவின் உறுப்பினர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர, சர்ச்சைக்குரிய 6 மரணங்களில் 2 மரணங்கள் மருந்து ஒவ்வாமையினால் ஏற்பட்டவை என தெரிவித்தார்.

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சர்ச்சைக்குரிய மரணங்கள் - காரணம் என்ன samugammedia கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளரின் மரணத்துக்கு செப்டாசிடைம் (Ceftazidime) என்ற நோயெதிர்ப்பு மருந்தை செலுத்தியதால் ஏற்பட்ட ஒவ்வாமையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.குறித்த நபரின் உடற் பாகங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக சம்பந்தப்பட்ட ஆய்வு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.இதேவேளை, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் செப்டாசிடிம் (Ceftazidime) எனப்படும் நோயெதிர்ப்பு மருந்தின் பாவனை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததை அடுத்து அதன் பாவனையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 67 வயதுடைய ஒருவர் கடந்த 6 ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட தினத்திலிருந்து அவருக்கு நேற்றுமுன்தினம் வரை 10 தடவைகள் குறித்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் 11வது முறையாக அவருக்கு செப்டாசிடிம் எனப்படும் குறித்த மருந்து செலுத்தப்பட்டதன் 5 நிமிடங்களின் பின்னர் அவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.இதேவேளை இதற்கு முன்னரும் இந்த மருந்தை செலுத்திய பின்னர் சில நோயாளர்கள் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குழுவொன்றை நியமித்தார்.அதன் அறிக்கை அண்மையில் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டதுடன், அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய அந்த குழுவின் உறுப்பினர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர, சர்ச்சைக்குரிய 6 மரணங்களில் 2 மரணங்கள் மருந்து ஒவ்வாமையினால் ஏற்பட்டவை என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement