• Sep 17 2024

நாளாந்தம் 543 கோடி ரூபாவை கடனாக பெறும் அரசாங்கம்! samugammedia

Chithra / Aug 13th 2023, 8:33 am
image

Advertisement

 அரசாங்கம் தனது பணிகளை நாளாந்தம் செயற்படுத்துவதற்கு 543 கோடி ரூபாவை கடனாகப் பெற வேண்டியுள்ளதாக நிதி அமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் அரசாங்கத்தின் சராசரி நாளாந்தச் செலவு 1425 கோடி ரூபாவாகும் எனவும், இதனால் அரசாங்கம் தனது அனைத்துச் செலவுகளையும் ஈடுகட்ட நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 677 கோடி ரூபாவை கடனாகப் பெற வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கம் தனது செலவீனத்தில் 91 வீதத்தை தொடர் செலவுகளுக்காகவும் (சம்பளங்கள்) 9 வீதத்தை மூலதனச் செலவுகளுக்காகவும் செலவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த ஐந்து மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 1,12,243 கோடி ரூபா எனவும், அரசாங்கத்தின் செலவு 2,13,710 கோடி ரூபா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்கம் 341,500 கோடி ரூபாவை வருவாயாக எதிர்பார்த்த போதிலும், முதல் ஐந்து மாதங்களில் 112,243 கோடி ரூபாவே பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாளாந்தம் 543 கோடி ரூபாவை கடனாக பெறும் அரசாங்கம் samugammedia  அரசாங்கம் தனது பணிகளை நாளாந்தம் செயற்படுத்துவதற்கு 543 கோடி ரூபாவை கடனாகப் பெற வேண்டியுள்ளதாக நிதி அமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.இதேவேளை, இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் அரசாங்கத்தின் சராசரி நாளாந்தச் செலவு 1425 கோடி ரூபாவாகும் எனவும், இதனால் அரசாங்கம் தனது அனைத்துச் செலவுகளையும் ஈடுகட்ட நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 677 கோடி ரூபாவை கடனாகப் பெற வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.அரசாங்கம் தனது செலவீனத்தில் 91 வீதத்தை தொடர் செலவுகளுக்காகவும் (சம்பளங்கள்) 9 வீதத்தை மூலதனச் செலவுகளுக்காகவும் செலவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த ஐந்து மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 1,12,243 கோடி ரூபா எனவும், அரசாங்கத்தின் செலவு 2,13,710 கோடி ரூபா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்கம் 341,500 கோடி ரூபாவை வருவாயாக எதிர்பார்த்த போதிலும், முதல் ஐந்து மாதங்களில் 112,243 கோடி ரூபாவே பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement