• May 04 2024

சீனாவில் மீண்டும் உச்சத்தை தொட்ட கொரோனா உயிரிழப்புக்கள்: அச்சத்தில் உலக நாடுகள்!

Sharmi / Dec 18th 2022, 7:28 pm
image

Advertisement

சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.


இவ்வாறான நிலையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதையடுத்து, தகனக் கூடம் முன்பு சடலங்களுடன் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.



அதேவேளை கொரோனா  உயிரிழப்புகள் அதிகரிப்பதால், சவப்பெட்டிகளின் தேவையும் அதிகரித்துள்ளது. தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஓட்டுனர்கள், இறுதிச் சடங்குகள் செய்யும் ஊழியர்கள் பணியை செய்ய தயக்கம் காட்டி வருவதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


 கடந்த 7ஆம் திகதி கொரோனா கட்டுப்பாடுகளை தளத்துவதற்கு முன்பு இருந்ததை விட, தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவில் மீண்டும் உச்சத்தை தொட்ட கொரோனா உயிரிழப்புக்கள்: அச்சத்தில் உலக நாடுகள் சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.இவ்வாறான நிலையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதையடுத்து, தகனக் கூடம் முன்பு சடலங்களுடன் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேவேளை கொரோனா  உயிரிழப்புகள் அதிகரிப்பதால், சவப்பெட்டிகளின் தேவையும் அதிகரித்துள்ளது. தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஓட்டுனர்கள், இறுதிச் சடங்குகள் செய்யும் ஊழியர்கள் பணியை செய்ய தயக்கம் காட்டி வருவதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 7ஆம் திகதி கொரோனா கட்டுப்பாடுகளை தளத்துவதற்கு முன்பு இருந்ததை விட, தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement