• May 22 2024

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை

Chithra / Dec 28th 2022, 9:48 am
image

Advertisement


கடந்த ஏழு நாட்களில், இலங்கையில் இருந்து 42 பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் மோசமான காலநிலையால் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால், சுகாதார விதிகள் மற்றும் விதிமுறைகளை முடிந்தவரை பின்பற்றுமாறு மருத்துவர்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


இதுவரை, 20,2571 பேர் கோவிட் நோய்த்தடுப்பு தடுப்பூசியின் நான்காவது டோஸைப் பெற்றுள்ளனர்.

தொற்றுநோயியல் துறையின் தரவுகளின்படி, இந்த நாட்டில் கொவிட் பரவியதில் இருந்து பத்தாயிரத்து அறுபத்தைந்து பேர் இறந்துள்ளனர்.

மேலும், ஆறு லட்சத்து ஐம்பத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை கடந்த ஏழு நாட்களில், இலங்கையில் இருந்து 42 பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.தற்போது நிலவும் மோசமான காலநிலையால் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால், சுகாதார விதிகள் மற்றும் விதிமுறைகளை முடிந்தவரை பின்பற்றுமாறு மருத்துவர்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.இதுவரை, 20,2571 பேர் கோவிட் நோய்த்தடுப்பு தடுப்பூசியின் நான்காவது டோஸைப் பெற்றுள்ளனர்.தொற்றுநோயியல் துறையின் தரவுகளின்படி, இந்த நாட்டில் கொவிட் பரவியதில் இருந்து பத்தாயிரத்து அறுபத்தைந்து பேர் இறந்துள்ளனர்.மேலும், ஆறு லட்சத்து ஐம்பத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement