• Nov 19 2024

பொதுத் தேர்தலில் பலர் போட்டியிடாததற்கு காரணம் ஊழல்- ரஞ்சன் ராமநாயக்க

Sharmi / Nov 7th 2024, 10:17 am
image

ஊழல் செய்ய முடியாது என்பதால்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் பலர் அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளனர் எனத் தெரிவித்த ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க, மக்களை ஏமாற்றும் அரசியல் கலாச்சாரம் மலையேறிவிட்டது என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் புத்தளம் எழுச்சி மாநாடு அக்கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், முதன்மை வேட்பாளருமான ஆப்தீன் எஹியா தலைமையில் நேற்று (5) புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரஞ்சன் ராமநாயக்க  இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கு முன்பு ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் புத்தளம் மாவட்டத்திற்கு எந்தவிதமான அபிவிருத்தி பணிகளையும் செய்யவில்லை. மாற்றமாக கொழும்பு குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டுவந்து கொட்டினார்கள்.

புத்தளம் மாவட்டம் ஒரு அழகான சுற்றுலா பிரதேசமாகும்.  கற்பிட்டியில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் அளவிலானோர் வருகை தருகிறார்கள். புத்தளத்தில் குப்பைகளை கொண்டுவந்து கொட்டுவதற்கு புத்தளம் ஒன்றும் குப்பைத் தொட்டி அல்ல.

புத்தளம் மாவட்ட மக்களின் வாக்குகளில் மட்டுமே குறியாக இருந்த அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் வந்து மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுகொண்ட பின், இங்கு வாழும் மக்களின் எந்த நலன்களிலும் அவர்கள் கவனம் செலுத்தவில்லை.

எனவே, தொடர்ந்தும் புத்தளம் மாவட்ட மக்களை அரசியல் ரீதியாக யாரும் ஏமாற்ற முடியாது. மக்கள் இப்போது விழிப்பாக இருக்கிறார்கள். புத்தளம் மாவட்டத்தில் மீன்பிடி, விவசாயம், சுற்றுலா, தொழில்வாய்ப்புக்கள் என சகல துறைகளிலும் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும்.

கைகள் சுத்தமில்லாத, ஊழலில் ஊறிப்போனவர்களோடு ஒன்றாக அரசியலில் பயணிக்க முடியாது என்ற காரணத்தில்தான் விஜேயதூங்க போன்று நாங்கள் இப்போது புதிய அரசியல் கட்சி ஒன்றின் ஊடாக பயணத்தை ஆரம்பித்திருக்கிறோம்.

எமது இந்த பயணத்தை தடுத்து நிறுத்துவதற்கு அல்லது அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்கு சிலர் முயற்சி செய்தார்கள். மாவட்டச் செயலாளரிடம் முறையிட்டார்கள், பொலிஸ் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்தார்கள்.

இறுதியில் ரஞ்சன் ராமநாயக்க தேர்தலில் போட்டியிடக் கூடயாது என்ற உத்தரவை பிறப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் கூட சென்றார்கள். ஆனால், இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியும் என்று நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியது.

கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வந்தேன்.

 குழந்தையொன்றை கொலை செய்தார் எனும் குற்றச்சாட்டில் மரண தண்டணை விதிக்கப்பட்ட மூதூர் ரிசானா விடயத்தில் அப்போதைய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல் முறையாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியிருந்தேன்.

மாத்திரமின்றி, வசீம் தாஹூதீன், லஸந்த விக்ரமதூங்க ஆகியோர் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட போதும் பாராளுமன்றத்தில் தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். இன, மத, கட்சி பேதங்கள் எதுவுமின்றி இவ்வாறு அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தேன்.

கடந்த காலங்களில் நான் சிறைத் தண்டணையை அனுபவித்திருந்தேன். இது இந்த நாட்டு மக்களுக்கும் தெரிந்த விடயம்தான். நான் ஊழல் செய்து, குற்றங்கள் புரிந்தமைக்காக சிறைத் தண்டனையை அனுபவிக்கவில்லை. உண்மையை பேசியமைக்காகவே என்னை சிறையில் அடைத்தார்கள்.  அன்றும் உண்மையையே பேசினேன். இன்றும் உண்மையை பேசுகிறோம்.

அதுபோல  அநீதிக்கு எதிராக பாராளுமன்றத்திற்குள் உள்ளேயும், வெளியேயும் குரல் எழுப்பி எப்போதும் உண்மையையே பேசுவோம். இதற்காக எமது ஐக்கிய ஜனநயாக குரல் கட்சிக்கு பலத்தை தாருங்கள். புத்தளம் மாவட்டத்தில் இருந்து இரண்டிற்கும் மேற்பட்டோரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள். உங்கள் மாவட்ட பிரதிநிதியோடு நாங்களும் இணைந்து குரல் எழுப்புவோம். புத்தளம் மாவட்ட மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வைப் பெற்றுக்கொடுப்போம்.

இன்று எமது கட்சியின் வருகை அடுத்து, எல்லோரும் மெய்சிலிர்த்துப் போயுள்ளனர். அதன் வெளிப்பாடுதான் எமது கட்சிக்கும், எங்களுக்கும் எதிராக சேறுபூசும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். 

இவற்றுக்கு எமது கட்சியும், எங்களது அணியும் ஒருபோதும் சோர்ந்து போகப் போவதில்லை. எங்களோடு மக்கள் இருக்கிறார்கள். மக்களின் குரலாக இந்த மைக் சின்னம் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி இருக்கும் என்றார்.

பொதுத் தேர்தலில் பலர் போட்டியிடாததற்கு காரணம் ஊழல்- ரஞ்சன் ராமநாயக்க ஊழல் செய்ய முடியாது என்பதால்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் பலர் அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளனர் எனத் தெரிவித்த ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க, மக்களை ஏமாற்றும் அரசியல் கலாச்சாரம் மலையேறிவிட்டது என்றும் தெரிவித்தார்.ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் புத்தளம் எழுச்சி மாநாடு அக்கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், முதன்மை வேட்பாளருமான ஆப்தீன் எஹியா தலைமையில் நேற்று (5) புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரஞ்சன் ராமநாயக்க  இவ்வாறு தெரிவித்தார்.இதற்கு முன்பு ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் புத்தளம் மாவட்டத்திற்கு எந்தவிதமான அபிவிருத்தி பணிகளையும் செய்யவில்லை. மாற்றமாக கொழும்பு குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டுவந்து கொட்டினார்கள்.புத்தளம் மாவட்டம் ஒரு அழகான சுற்றுலா பிரதேசமாகும்.  கற்பிட்டியில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் அளவிலானோர் வருகை தருகிறார்கள். புத்தளத்தில் குப்பைகளை கொண்டுவந்து கொட்டுவதற்கு புத்தளம் ஒன்றும் குப்பைத் தொட்டி அல்ல.புத்தளம் மாவட்ட மக்களின் வாக்குகளில் மட்டுமே குறியாக இருந்த அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் வந்து மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுகொண்ட பின், இங்கு வாழும் மக்களின் எந்த நலன்களிலும் அவர்கள் கவனம் செலுத்தவில்லை.எனவே, தொடர்ந்தும் புத்தளம் மாவட்ட மக்களை அரசியல் ரீதியாக யாரும் ஏமாற்ற முடியாது. மக்கள் இப்போது விழிப்பாக இருக்கிறார்கள். புத்தளம் மாவட்டத்தில் மீன்பிடி, விவசாயம், சுற்றுலா, தொழில்வாய்ப்புக்கள் என சகல துறைகளிலும் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும்.கைகள் சுத்தமில்லாத, ஊழலில் ஊறிப்போனவர்களோடு ஒன்றாக அரசியலில் பயணிக்க முடியாது என்ற காரணத்தில்தான் விஜேயதூங்க போன்று நாங்கள் இப்போது புதிய அரசியல் கட்சி ஒன்றின் ஊடாக பயணத்தை ஆரம்பித்திருக்கிறோம்.எமது இந்த பயணத்தை தடுத்து நிறுத்துவதற்கு அல்லது அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்கு சிலர் முயற்சி செய்தார்கள். மாவட்டச் செயலாளரிடம் முறையிட்டார்கள், பொலிஸ் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்தார்கள்.இறுதியில் ரஞ்சன் ராமநாயக்க தேர்தலில் போட்டியிடக் கூடயாது என்ற உத்தரவை பிறப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் கூட சென்றார்கள். ஆனால், இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியும் என்று நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியது.கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வந்தேன். குழந்தையொன்றை கொலை செய்தார் எனும் குற்றச்சாட்டில் மரண தண்டணை விதிக்கப்பட்ட மூதூர் ரிசானா விடயத்தில் அப்போதைய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல் முறையாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியிருந்தேன்.மாத்திரமின்றி, வசீம் தாஹூதீன், லஸந்த விக்ரமதூங்க ஆகியோர் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட போதும் பாராளுமன்றத்தில் தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். இன, மத, கட்சி பேதங்கள் எதுவுமின்றி இவ்வாறு அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தேன்.கடந்த காலங்களில் நான் சிறைத் தண்டணையை அனுபவித்திருந்தேன். இது இந்த நாட்டு மக்களுக்கும் தெரிந்த விடயம்தான். நான் ஊழல் செய்து, குற்றங்கள் புரிந்தமைக்காக சிறைத் தண்டனையை அனுபவிக்கவில்லை. உண்மையை பேசியமைக்காகவே என்னை சிறையில் அடைத்தார்கள்.  அன்றும் உண்மையையே பேசினேன். இன்றும் உண்மையை பேசுகிறோம்.அதுபோல  அநீதிக்கு எதிராக பாராளுமன்றத்திற்குள் உள்ளேயும், வெளியேயும் குரல் எழுப்பி எப்போதும் உண்மையையே பேசுவோம். இதற்காக எமது ஐக்கிய ஜனநயாக குரல் கட்சிக்கு பலத்தை தாருங்கள். புத்தளம் மாவட்டத்தில் இருந்து இரண்டிற்கும் மேற்பட்டோரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள். உங்கள் மாவட்ட பிரதிநிதியோடு நாங்களும் இணைந்து குரல் எழுப்புவோம். புத்தளம் மாவட்ட மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வைப் பெற்றுக்கொடுப்போம்.இன்று எமது கட்சியின் வருகை அடுத்து, எல்லோரும் மெய்சிலிர்த்துப் போயுள்ளனர். அதன் வெளிப்பாடுதான் எமது கட்சிக்கும், எங்களுக்கும் எதிராக சேறுபூசும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இவற்றுக்கு எமது கட்சியும், எங்களது அணியும் ஒருபோதும் சோர்ந்து போகப் போவதில்லை. எங்களோடு மக்கள் இருக்கிறார்கள். மக்களின் குரலாக இந்த மைக் சின்னம் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி இருக்கும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement