• Nov 25 2024

வாழ்க்கை செலவு நெருக்கடி : நைஜீரியாவில் வெடித்த போராட்டம்!

Tamil nila / Aug 1st 2024, 6:40 pm
image

நைஜீரியாவில் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள நிலையில் பெருமளவான இளைஞர்கள் தெருக்களில் குவிந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டகாரர்களை கலைப்பதற்காக பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

அபுஜாவில் உள்ள  ஒரு மைதானத்தில் போராட்டத்தை கட்டுப்படுத்த நீதிமன்றம் உத்தரவு வழங்கியதாக அறிய முடிகிறது.

நைஜீரிய பொலிஸ் அதிகாரிகள் ஜனாதிபதி வில்லாவிலிருந்து சில கிலோமீட்டர்கள்  திரண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதைக் காண முடிந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் மோதலால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் பௌச்சி மற்றும் போர்னோ மாநிலங்களில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பாதுகாப்புப் படையினர் யாரையும் கைது செய்தார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

வாழ்க்கை செலவு நெருக்கடி : நைஜீரியாவில் வெடித்த போராட்டம் நைஜீரியாவில் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள நிலையில் பெருமளவான இளைஞர்கள் தெருக்களில் குவிந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.போராட்டகாரர்களை கலைப்பதற்காக பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.அபுஜாவில் உள்ள  ஒரு மைதானத்தில் போராட்டத்தை கட்டுப்படுத்த நீதிமன்றம் உத்தரவு வழங்கியதாக அறிய முடிகிறது.நைஜீரிய பொலிஸ் அதிகாரிகள் ஜனாதிபதி வில்லாவிலிருந்து சில கிலோமீட்டர்கள்  திரண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதைக் காண முடிந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் மோதலால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் பௌச்சி மற்றும் போர்னோ மாநிலங்களில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பாதுகாப்புப் படையினர் யாரையும் கைது செய்தார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

Advertisement

Advertisement

Advertisement