• Apr 27 2024

உக்ரைனுக்கு போர் டாங்கிகளைக் கொடுக்கும் நாடுகள் - அமெரிக்காவை குறைசொல்லும் வடகொரியா!

Tamil nila / Jan 28th 2023, 3:10 pm
image

Advertisement

மேற்கத்திய நாடுகளால் உக்ரைனுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட 321 டாங்கிகள் இன்னும் சில நாட்களில் வந்துவிடும் என்று பிரான்சுக்கான உக்ரைன் தூதர் உறுதிப்படுத்தினார்


உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், உக்ரைனுக்கு பல நாடுகளும் உதவிக்கரத்தை நீட்டி வருகின்ரன. மேற்கத்திய நாடுகளால் உக்ரைனுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட 321 டாங்கிகள் இன்னும் சில நாட்களில் வந்துவிடும் என்று பிரான்சுக்கான உக்ரைன் தூதர் உறுதிப்படுத்தினார். 


"இன்றைய நிலவரப்படி, உக்ரைனுக்கு 321 கனரக பீரங்கி டாங்கிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பல நாடுகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன" என்று பிரான்சுக்கான உக்ரைனின் தூதர் வாடிம் ஓமெல்சென்கோ வெள்ளிக்கிழமை (ஜனவரி 27) பிரெஞ்சு தொலைக்காட்சி நிலையமான BFM க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.


"ஒவ்வொரு நாடும் அனுப்பும் டாங்கிகளுக்கான டெலிவரி விதிமுறைகள் மாறுபடும், மேலும் இந்த உதவி விரைவில் எங்களுக்குத் தேவை" என்று அவர் மேலும் கூறினார்.


உக்ரைனுக்கு கிடைக்கவிருக்கும் பீரங்கி வாகனங்களின் மொத்த எண்ணிக்கையைப் பற்றி தெரிவித்த உக்ரைன் தூதர், எந்த நாடு, எவ்வளவு டாங்கிகளை கொடுக்கும் என்ற தனிப்பட்ட எண்ணிக்கையை வழங்கவில்லை. 31 எம்1 ஆப்ராம்ஸ் டாங்கிகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ள நிலையில், 14 Leopard 2 A6s டாங்கிகளை அனுப்ப ஜெர்மனி ஒப்புக்கொண்டதாக தெரிய வந்துள்ளன.



முன்னதாக, இங்கிலாந்து 14 சேலஞ்சர் 2 டாங்கிகளை அனுப்புவதாக உறுதியளித்தது, அதே நேரத்தில் போலந்து தனது Leopard 2s டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்புமாறு ஜெர்மனியிடம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இது போலந்து, ஏற்கனவே ஜெர்மனிக்கு கொடுத்திருந்த கொள்முதல் ஆர்டர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையில், வட கொரியா, உக்ரைனுக்கு டாங்கிகளை அனுப்பும் நாடுகளை சாடியுள்ளது, மேலும் அவர்கள் ப்ராக்ஸி போரின் மூலம் மேலாதிக்கத்தை வெல்வதற்காக "சிவப்பு கோட்டை கடக்கிறார்கள்" என்று வடகொரியா கூறுகிறது.


இது தொடர்பாக, அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் கண்டித்த வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், அமெரிக்காவிற்கு எதிராக ரஷ்யாவைப் போலவே வடகொரியாவும் மோதலுக்கு தயாராக இருப்பதாகக் கூறினார்.


"உக்ரைனுக்கு தரைவழித் தாக்குதலுக்கான இராணுவ தளவாடங்களை வழங்குவதன் மூலம் அமெரிக்கா போர்ச் சூழலை அதிகரிப்பது குறித்து தீவிர கவலையைத் தெரிவிக்கிறேன்" என்று கிம் யோ ஜாங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு "இறையாண்மை அரசுகள் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்துவதை அவதூறாகப் பேசுவதற்கு உரிமையோ நியாயமோ இல்லை" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு போர் டாங்கிகளைக் கொடுக்கும் நாடுகள் - அமெரிக்காவை குறைசொல்லும் வடகொரியா மேற்கத்திய நாடுகளால் உக்ரைனுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட 321 டாங்கிகள் இன்னும் சில நாட்களில் வந்துவிடும் என்று பிரான்சுக்கான உக்ரைன் தூதர் உறுதிப்படுத்தினார்உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், உக்ரைனுக்கு பல நாடுகளும் உதவிக்கரத்தை நீட்டி வருகின்ரன. மேற்கத்திய நாடுகளால் உக்ரைனுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட 321 டாங்கிகள் இன்னும் சில நாட்களில் வந்துவிடும் என்று பிரான்சுக்கான உக்ரைன் தூதர் உறுதிப்படுத்தினார். "இன்றைய நிலவரப்படி, உக்ரைனுக்கு 321 கனரக பீரங்கி டாங்கிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பல நாடுகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன" என்று பிரான்சுக்கான உக்ரைனின் தூதர் வாடிம் ஓமெல்சென்கோ வெள்ளிக்கிழமை (ஜனவரி 27) பிரெஞ்சு தொலைக்காட்சி நிலையமான BFM க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்."ஒவ்வொரு நாடும் அனுப்பும் டாங்கிகளுக்கான டெலிவரி விதிமுறைகள் மாறுபடும், மேலும் இந்த உதவி விரைவில் எங்களுக்குத் தேவை" என்று அவர் மேலும் கூறினார்.உக்ரைனுக்கு கிடைக்கவிருக்கும் பீரங்கி வாகனங்களின் மொத்த எண்ணிக்கையைப் பற்றி தெரிவித்த உக்ரைன் தூதர், எந்த நாடு, எவ்வளவு டாங்கிகளை கொடுக்கும் என்ற தனிப்பட்ட எண்ணிக்கையை வழங்கவில்லை. 31 எம்1 ஆப்ராம்ஸ் டாங்கிகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ள நிலையில், 14 Leopard 2 A6s டாங்கிகளை அனுப்ப ஜெர்மனி ஒப்புக்கொண்டதாக தெரிய வந்துள்ளன.முன்னதாக, இங்கிலாந்து 14 சேலஞ்சர் 2 டாங்கிகளை அனுப்புவதாக உறுதியளித்தது, அதே நேரத்தில் போலந்து தனது Leopard 2s டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்புமாறு ஜெர்மனியிடம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இது போலந்து, ஏற்கனவே ஜெர்மனிக்கு கொடுத்திருந்த கொள்முதல் ஆர்டர் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில், வட கொரியா, உக்ரைனுக்கு டாங்கிகளை அனுப்பும் நாடுகளை சாடியுள்ளது, மேலும் அவர்கள் ப்ராக்ஸி போரின் மூலம் மேலாதிக்கத்தை வெல்வதற்காக "சிவப்பு கோட்டை கடக்கிறார்கள்" என்று வடகொரியா கூறுகிறது.இது தொடர்பாக, அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் கண்டித்த வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், அமெரிக்காவிற்கு எதிராக ரஷ்யாவைப் போலவே வடகொரியாவும் மோதலுக்கு தயாராக இருப்பதாகக் கூறினார்."உக்ரைனுக்கு தரைவழித் தாக்குதலுக்கான இராணுவ தளவாடங்களை வழங்குவதன் மூலம் அமெரிக்கா போர்ச் சூழலை அதிகரிப்பது குறித்து தீவிர கவலையைத் தெரிவிக்கிறேன்" என்று கிம் யோ ஜாங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு "இறையாண்மை அரசுகள் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்துவதை அவதூறாகப் பேசுவதற்கு உரிமையோ நியாயமோ இல்லை" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement