• May 02 2024

உலகில் அதிக பொது விடுமுறைகளை கொண்ட நாடுகள்! இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..? samugammedia

Chithra / Jul 10th 2023, 6:43 am
image

Advertisement

உலகில் அதிக வருடாந்த பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த தரவுகளின்படி இலங்கையில் வருடாந்த பொது விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 25 ஆக உள்ளதுடன், அதிக வருடாந்த பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடாக நேபாளம் இருக்கின்றது.

அங்கு ஆண்டு தோறும் 35 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவுகளின்படி, அதிக பொது விடுமுறைகளைக் கொண்ட முதல் ஐந்து நாடுகளில் மூன்று நாடுகள் தெற்காசிய நாடுகளாகும்.

நேபாளம் மற்றும் இலங்கைக்கு கூடுதலாக, பங்களாதேஷ் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ளது, பங்களாதேஷில் ஆண்டுதோறும் 22 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளில் 10-13 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மெக்சிக்கோ 08 பொது விடுமுறை நாட்களுடன் குறைந்த வருடாந்த பொது விடுமுறைகளைக் கொண்ட நாடாக மாறியுள்ளது.


உலகில் அதிக பொது விடுமுறைகளை கொண்ட நாடுகள் இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா. samugammedia உலகில் அதிக வருடாந்த பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.இந்த தரவுகளின்படி இலங்கையில் வருடாந்த பொது விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 25 ஆக உள்ளதுடன், அதிக வருடாந்த பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடாக நேபாளம் இருக்கின்றது.அங்கு ஆண்டு தோறும் 35 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தரவுகளின்படி, அதிக பொது விடுமுறைகளைக் கொண்ட முதல் ஐந்து நாடுகளில் மூன்று நாடுகள் தெற்காசிய நாடுகளாகும்.நேபாளம் மற்றும் இலங்கைக்கு கூடுதலாக, பங்களாதேஷ் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ளது, பங்களாதேஷில் ஆண்டுதோறும் 22 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுகின்றது.அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளில் 10-13 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மெக்சிக்கோ 08 பொது விடுமுறை நாட்களுடன் குறைந்த வருடாந்த பொது விடுமுறைகளைக் கொண்ட நாடாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement