கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் பெயர் மற்றும் படத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் ரிஸ்வான் நேற்று (30) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கு பதிவேடுகளை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சில குழுக்கள் வட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசிப்பவர்களிடம் தமது பெயர் மற்றும் படத்தைப் பயன்படுத்தி பணம் வசூலித்ததாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அண்மையில் முறைப்பாடு செய்திருந்தார்.
அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி மோசடி - சந்தேகநபர்களைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் பெயர் மற்றும் படத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் ரிஸ்வான் நேற்று (30) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கு பதிவேடுகளை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். சில குழுக்கள் வட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசிப்பவர்களிடம் தமது பெயர் மற்றும் படத்தைப் பயன்படுத்தி பணம் வசூலித்ததாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அண்மையில் முறைப்பாடு செய்திருந்தார்.