முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொடவினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனுவை விசாரிப்பதற்காக ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த கோரிக்கையை பரிசீலிக்கும் வகையில், இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இது தொடர்பான மனுவை விசாரிப்பதற்காக ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றக் குழுவொன்றை நியமிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளதுடன் இது தொடர்பான மனு வரும் 25ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொட தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொடவினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனுவை விசாரிப்பதற்காக ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதன்படி, குறித்த கோரிக்கையை பரிசீலிக்கும் வகையில், இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.இது தொடர்பான மனுவை விசாரிப்பதற்காக ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றக் குழுவொன்றை நியமிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளதுடன் இது தொடர்பான மனு வரும் 25ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.