• Mar 29 2024

ஒரே பிரசவத்தில் 3 கன்று குட்டிகளை ஈன்ற பசு மாடு! SamugamMedia

Tamil nila / Mar 23rd 2023, 6:14 pm
image

Advertisement

பசு ஒன்று ஒரே பிரசவத்தில் 3 கன்றுகளை ஈன்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் 

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் நாச்சிபாளையத்தில் இடம்பெற்றுள்ளது. 


குறித்த பகுதியை சேர்ந்த நவநீதன்  வளர்த்த பசுமாடு கருத்தரிச்ச நிலையில், கன்று போடக் கூடிய அறிகுறிகள் தென்பட்ட நிலையில், நீண்ட  நேரமாகியும் பசுமாடு கன்றுபோட முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. 


இதனால்  உதவி கால்நடை மருத்துவர்  அங்கு வரவழைக்கப்பட்டமையைத்  தொடர்ந்து  பசு மாட்டின் வயிற்றிலிருந்து மூன்று காளை கன்றுகளை வெளியே எடுத்துள்ளார். ஆனால் 2 கன்றுகள் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் இறக்க,  ஒரு கன்றுக்குட்டி மட்டுமே கால்நடை மருத்துவரால் காப்பாற்றபட்டுள்ளது. இதனால் விவசாயி நவநீதன் மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளார். 


ஒரு பசு மாடு மூன்று கன்றுகளை ஈன்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை தோற்றுவித்த  போதிலும், அதில் இரண்டு கன்றுகள் இறந்தமை  அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


உரிய  நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமையாலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஒரே பிரசவத்தில் 3 கன்று குட்டிகளை ஈன்ற பசு மாடு SamugamMedia பசு ஒன்று ஒரே பிரசவத்தில் 3 கன்றுகளை ஈன்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் நாச்சிபாளையத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த நவநீதன்  வளர்த்த பசுமாடு கருத்தரிச்ச நிலையில், கன்று போடக் கூடிய அறிகுறிகள் தென்பட்ட நிலையில், நீண்ட  நேரமாகியும் பசுமாடு கன்றுபோட முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனால்  உதவி கால்நடை மருத்துவர்  அங்கு வரவழைக்கப்பட்டமையைத்  தொடர்ந்து  பசு மாட்டின் வயிற்றிலிருந்து மூன்று காளை கன்றுகளை வெளியே எடுத்துள்ளார். ஆனால் 2 கன்றுகள் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் இறக்க,  ஒரு கன்றுக்குட்டி மட்டுமே கால்நடை மருத்துவரால் காப்பாற்றபட்டுள்ளது. இதனால் விவசாயி நவநீதன் மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளார். ஒரு பசு மாடு மூன்று கன்றுகளை ஈன்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை தோற்றுவித்த  போதிலும், அதில் இரண்டு கன்றுகள் இறந்தமை  அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.உரிய  நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமையாலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement