• Nov 26 2024

ஐக்கிய மக்கள் சக்திக்குள் வலுக்கும் விரிசல் - ரணில் பக்கம் தாவ தயாராகும் முக்கியஸ்தர்கள்..?

Chithra / Sep 11th 2024, 10:57 am
image

 

அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட பொதுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்படாததால் சில தொகுதி அமைப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனால் பாரியளவில் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது அரசியல் மேடையில் பேச இரண்டாம் மட்ட தலைவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதிலும் மாவட்டத்தின் ஆசன அமைப்பாளருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமையே பிரதான காரணம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்ற சந்தேகம் காரணமாக ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க குறித்த ஆசன அமைப்பாளர் தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்திக்குள் வலுக்கும் விரிசல் - ரணில் பக்கம் தாவ தயாராகும் முக்கியஸ்தர்கள்.  அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட பொதுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்படாததால் சில தொகுதி அமைப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனால் பாரியளவில் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.இதன்போது அரசியல் மேடையில் பேச இரண்டாம் மட்ட தலைவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதிலும் மாவட்டத்தின் ஆசன அமைப்பாளருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமையே பிரதான காரணம் எனவும் கூறப்படுகிறது.இந்நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்ற சந்தேகம் காரணமாக ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க குறித்த ஆசன அமைப்பாளர் தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement