• Nov 26 2024

நீதிமன்ற தீர்ப்புக்களை விமர்சிப்பது பாரதூரமான குற்றம்! ஜீ.எல்.பீரிஸ் எச்சரிக்கை

Chithra / Jul 29th 2024, 8:51 am
image

 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறினாலும், வாக்கு பலத்தினால் வழங்கும் தீர்ப்பு மக்கள் கைகளில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வாதுவ போதிராஜ விகாராதிபதி கோட்ட ஸ்ரீ கல்யாணி சமகி தம்ம மகா சங்க சபையின் மநாயக்கர் கொடபிடியே ராகுல தேரரை நேற்று சந்தித்து அரசியல் நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும்  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அமோக வெற்றியீட்டுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை.

நாடாளுமன்றின் வரப்பிரசாதங்களுக்குள் ஒளிந்து கொண்டு நீதிமன்ற தீர்ப்புக்களை விமர்சனம் செய்வது பாரதூரமான குற்றம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் ஒருவர் இல்லாமை ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தடையில்லை.

ஜனாதிபதியும், பிரதமரும் கொழும்பு றோயல் கல்லூரிக்கு சென்று நீதிமன்ற தீர்ப்பினை ஏற்கப்போவதில்லை என கூறியுள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். 

நீதிமன்ற தீர்ப்புக்களை விமர்சிப்பது பாரதூரமான குற்றம் ஜீ.எல்.பீரிஸ் எச்சரிக்கை  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறினாலும், வாக்கு பலத்தினால் வழங்கும் தீர்ப்பு மக்கள் கைகளில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.வாதுவ போதிராஜ விகாராதிபதி கோட்ட ஸ்ரீ கல்யாணி சமகி தம்ம மகா சங்க சபையின் மநாயக்கர் கொடபிடியே ராகுல தேரரை நேற்று சந்தித்து அரசியல் நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும்  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அமோக வெற்றியீட்டுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை.நாடாளுமன்றின் வரப்பிரசாதங்களுக்குள் ஒளிந்து கொண்டு நீதிமன்ற தீர்ப்புக்களை விமர்சனம் செய்வது பாரதூரமான குற்றம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பொலிஸ் மா அதிபர் ஒருவர் இல்லாமை ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தடையில்லை.ஜனாதிபதியும், பிரதமரும் கொழும்பு றோயல் கல்லூரிக்கு சென்று நீதிமன்ற தீர்ப்பினை ஏற்கப்போவதில்லை என கூறியுள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement