• Jan 06 2025

தனி நபர்களின் பாதுகாப்புக்காக கோடிக்கணக்கில் செலவிடமுடியாது! - பாதுகாப்பு அமைச்சர் அதிரடி அறிவிப்பு

Chithra / Dec 15th 2024, 10:13 am
image

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு 60 பொலிஸாரும் 231 முப்படையைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்புக்காக தற்போதும் உள்ளனர். ஆனால் எதிர்க்கட்சியினர் அதனை மறைத்து அவரது உயிருக்கு ஆபத்து என்று பொய்யான பிரசாரங்களைச் செய்து, மக்களை திசை திருப்புவதற்கான சூழச்சியை முன்னெடுக்கின்றனர் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதிகளில் எந்த ஒருவரினதும் பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு அறிக்கைகளின் பிரகாரம் பொலிஸாரே தீர்மானம் எடுக்கின்றார்கள். அந்த தீர்மானங்களில் கடந்த கால ஆட்சியாளர்கள் போன்று நாங்கள் தலையீடுகளைச் செய்வதில்லை.

அந்த வகையில் பொலிஸார், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 60 பொலிஸை  வழங்கியுள்ளனர்.

மேலும் இராணுவத்தைச் சேர்ந்த 64 பேர் உள்ளடங்கலாக 231 முப்படைகளைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்புக்காக இன்னமும் உள்ளனர்.

ஆனால் அந்த விடயத்தினை எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் மறைத்துவிடுகின்றார்கள்.

மக்களை திசை திருப்பும் சூழ்ச்சியுடன் தான் இந்த கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். 

அதேநேரம், நாட்டின் தேசிய பாதுகாப்பையும், பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றபோது, தனி நபர்களுக்கான பாதுகாப்புக்காக கோடிக்கணக்கில் செலவிடமுடியாது.

அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் கூட இன்னமும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை பெற்றுக்கொள்ளாத நிலையில் உள்ளனர். 

ஆகவே, அரசாங்கத்தின் மீது அரசியல் நோக்கத்துக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. - என்றார்.

தனி நபர்களின் பாதுகாப்புக்காக கோடிக்கணக்கில் செலவிடமுடியாது - பாதுகாப்பு அமைச்சர் அதிரடி அறிவிப்பு  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு 60 பொலிஸாரும் 231 முப்படையைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்புக்காக தற்போதும் உள்ளனர். ஆனால் எதிர்க்கட்சியினர் அதனை மறைத்து அவரது உயிருக்கு ஆபத்து என்று பொய்யான பிரசாரங்களைச் செய்து, மக்களை திசை திருப்புவதற்கான சூழச்சியை முன்னெடுக்கின்றனர் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,முன்னாள் ஜனாதிபதிகளில் எந்த ஒருவரினதும் பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு அறிக்கைகளின் பிரகாரம் பொலிஸாரே தீர்மானம் எடுக்கின்றார்கள். அந்த தீர்மானங்களில் கடந்த கால ஆட்சியாளர்கள் போன்று நாங்கள் தலையீடுகளைச் செய்வதில்லை.அந்த வகையில் பொலிஸார், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 60 பொலிஸை  வழங்கியுள்ளனர்.மேலும் இராணுவத்தைச் சேர்ந்த 64 பேர் உள்ளடங்கலாக 231 முப்படைகளைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்புக்காக இன்னமும் உள்ளனர்.ஆனால் அந்த விடயத்தினை எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் மறைத்துவிடுகின்றார்கள்.மக்களை திசை திருப்பும் சூழ்ச்சியுடன் தான் இந்த கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். அதேநேரம், நாட்டின் தேசிய பாதுகாப்பையும், பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றபோது, தனி நபர்களுக்கான பாதுகாப்புக்காக கோடிக்கணக்கில் செலவிடமுடியாது.அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் கூட இன்னமும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை பெற்றுக்கொள்ளாத நிலையில் உள்ளனர். ஆகவே, அரசாங்கத்தின் மீது அரசியல் நோக்கத்துக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement