யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் இல்லாத சமயத்தில் 40 பவுண் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன களவாடப்பபட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியட்சர் எம்.எஸ்.ஜரூல் வழிகாட்டலில் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சமன் பிறேமதிலக தலைமையிலான குழுவினர், கிளிநொச்சியில் பதுங்கியிருந்த ஒருவரையும், குறித்த வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
சட்டத்தரணி இல்லாத நேரம் தொடர்பாக பிரதான சந்தேக நபருக்கு வீட்டுப் பணிப்பெண் வழங்கிய தகவலுக்கமைய குறித்த திருட்டு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கைதான சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழில் சட்டத்தரணியின் வீட்டில் கோடிக்கணக்கான பணம் மாயம்; பணிப்பெண் உள்ளிட்ட இருவர் கைது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் இல்லாத சமயத்தில் 40 பவுண் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன களவாடப்பபட்டது. குறித்த சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியட்சர் எம்.எஸ்.ஜரூல் வழிகாட்டலில் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சமன் பிறேமதிலக தலைமையிலான குழுவினர், கிளிநொச்சியில் பதுங்கியிருந்த ஒருவரையும், குறித்த வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.சட்டத்தரணி இல்லாத நேரம் தொடர்பாக பிரதான சந்தேக நபருக்கு வீட்டுப் பணிப்பெண் வழங்கிய தகவலுக்கமைய குறித்த திருட்டு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில், கைதான சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.