• Nov 26 2024

மின்சார சபை ஊழியர்களின் கடனுக்கு வட்டி செலுத்தும் வாடிக்கையாளர்கள்..! அமைச்சரின் அதிரடி உத்தரவு

Chithra / Jan 21st 2024, 8:00 am
image

 

இலங்கை மின்சார சபையின் பணியாளர்களினால் மின்சார சபையில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 12 பில்லியன் ரூபாய் பெறுமதியான கடன் தொகைக்கான முழு வட்டியையும் வசூலிப்பதற்கான முறைமை ஒன்றை தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் நிர்வாகத்துக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக குறித்த கடன் வட்டியில் மூன்றில் இரண்டு பங்கை இலங்கை மின்சார சபை செலுத்தி வருவதாகவும்,

அதற்கான பணம் மக்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் மின்சாரக் கட்டணத்தில் இருந்து பெறப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், இலங்கை மின்சார சபையின் பணியாளர்களினால் பெற்றுக்கொள்ளப்படும் கடன் வசதிகள் மற்றும் புதிய பணியாளர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அறிக்கையொன்றை கோரியிருந்த நிலையில் இது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மின்சார சபை ஊழியர்களின் கடனுக்கு வட்டி செலுத்தும் வாடிக்கையாளர்கள். அமைச்சரின் அதிரடி உத்தரவு  இலங்கை மின்சார சபையின் பணியாளர்களினால் மின்சார சபையில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 12 பில்லியன் ரூபாய் பெறுமதியான கடன் தொகைக்கான முழு வட்டியையும் வசூலிப்பதற்கான முறைமை ஒன்றை தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையின் நிர்வாகத்துக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக குறித்த கடன் வட்டியில் மூன்றில் இரண்டு பங்கை இலங்கை மின்சார சபை செலுத்தி வருவதாகவும்,அதற்கான பணம் மக்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் மின்சாரக் கட்டணத்தில் இருந்து பெறப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்தநிலையில், இலங்கை மின்சார சபையின் பணியாளர்களினால் பெற்றுக்கொள்ளப்படும் கடன் வசதிகள் மற்றும் புதிய பணியாளர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அறிக்கையொன்றை கோரியிருந்த நிலையில் இது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement