இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
தப்போது அதன் கட்டுப்பாடு தமது நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிடப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.
இதனை விரைவில் மீட்டெடுக்க தேவையான பணிகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தனது முகநூல் பக்கத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் யூடியூப் தளத்தில் தற்போதைக்கு 'Brad Garlinghouse' எனும் பெயர் கொண்ட வேறொரு தரப்பின் காணொளிகள் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த யூடியூப் சேனல் சுமார் 83 ஆயிரம் பின்பற்றுபவர்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் மீது சைபர் தாக்குதல் இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.தப்போது அதன் கட்டுப்பாடு தமது நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிடப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.இதனை விரைவில் மீட்டெடுக்க தேவையான பணிகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தனது முகநூல் பக்கத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இதற்கிடையே இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் யூடியூப் தளத்தில் தற்போதைக்கு 'Brad Garlinghouse' எனும் பெயர் கொண்ட வேறொரு தரப்பின் காணொளிகள் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த யூடியூப் சேனல் சுமார் 83 ஆயிரம் பின்பற்றுபவர்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.