• Nov 24 2024

நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் - அரச தரப்பு எம்.பி. விடுத்த எச்சரிக்கை

Chithra / Jul 29th 2024, 5:47 pm
image

  

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துடன் புதிய பொருளாதார மாற்றச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும், பாரம்பரிய குறுகிய பிரிவினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களை தவறாக வழிநடத்தும் கருத்துக்களை சிலர் முன்வைப்பது வருந்தத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் முன்னைய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டதாகவும் அவ்வாறானதொரு நிலை ஏற்படாமல் தடுப்பதற்கு வாக்குகளைப் பயன்படுத்துவதா என்ற கேள்வி எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி இலங்கை மக்கள் முன் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் - அரச தரப்பு எம்.பி. விடுத்த எச்சரிக்கை   எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.அத்துடன் நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துடன் புதிய பொருளாதார மாற்றச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும், பாரம்பரிய குறுகிய பிரிவினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களை தவறாக வழிநடத்தும் கருத்துக்களை சிலர் முன்வைப்பது வருந்தத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.மேலும் முன்னைய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டதாகவும் அவ்வாறானதொரு நிலை ஏற்படாமல் தடுப்பதற்கு வாக்குகளைப் பயன்படுத்துவதா என்ற கேள்வி எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி இலங்கை மக்கள் முன் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement