• Jul 31 2025

நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டோரது வழக்கு தீர்ப்புக்கு திகதி!

Chithra / Jul 30th 2025, 11:04 am
image

1996 ஆம் ஆண்டு நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேர் தொடர்பான வழக்கு  ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி தீர்ப்புக்காக திகதியிடப்பட்டுள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற பகுதியானது சாவகச்சேரி நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உட்படுவதால் குறித்த வழக்கு சாவச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கானது தீர்ப்புக்காக இன்றையதினம் திகதியிடப்பட்டது. 

இருப்பினும் நீதவான் இன்றையதினம் விடுமுறையில் இருந்த காரணத்தினால் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி குறித்த வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டுள்ளது.


நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டோரது வழக்கு தீர்ப்புக்கு திகதி 1996 ஆம் ஆண்டு நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேர் தொடர்பான வழக்கு  ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி தீர்ப்புக்காக திகதியிடப்பட்டுள்ளது.கடந்த 1996 ஆம் ஆண்டு நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.சம்பவம் நடைபெற்ற பகுதியானது சாவகச்சேரி நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உட்படுவதால் குறித்த வழக்கு சாவச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தது.இந்நிலையில் குறித்த வழக்கானது தீர்ப்புக்காக இன்றையதினம் திகதியிடப்பட்டது. இருப்பினும் நீதவான் இன்றையதினம் விடுமுறையில் இருந்த காரணத்தினால் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி குறித்த வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement