• May 19 2024

துருக்கி இடிபாடுகளுக்கு சிக்கிய மகள்! நெஞ்சை உலுக்கும் தந்தையின் செயல்

Chithra / Feb 8th 2023, 7:56 am
image

Advertisement

துருக்கி மற்றும் சிரியாவை மொத்தமாக புரட்டிப்போட்டுள்ள நிலநடுக்கத்தில் இதுவரை 7,200 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் தொடர்பில் நெஞ்சை உலுக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


கட்டட இடிபாடுகளில் சிக்கி புதைந்துபோயுள்ள இளம் வயது மகளின் கைகளை கோர்த்தபடி, தந்தை ஒருவர் காத்திருக்கும் நொறுங்க வைக்கும் காட்சி பலரையும் கலங்கடித்துள்ளது.

15 வயதேயான சிறுமி மொத்தமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொள்ள, தந்தை Mesut Hancer தமது மகளின் வெளியேத் தெரியும் கைகளை மட்டும் கோர்த்தபடி காணப்பட்டுள்ளார்.


இந்த காட்சி அனைவரின் மனதையும் கலங்கடித்துள்ளது.

இதேவேளை ஆயிரக்கணக்கான சிறார்கள் இடிபாடுகளில் சிக்கி மரணமடைந்திருக்கலாம் எனவும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.


கடும் குளிர், பனிப்பொழிவு காரணமாக மீட்பு நடவடிக்கைகள் தாமதமாவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கையில், இரண்டு நாடுகளிலும் மொத்தமாக இறப்பு எண்ணிக்கை 20,000 தொடலாம் எனவும் 1.4 மில்லியன் சிறார்கள் உட்பட மொத்தம் 23 மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


சுமார் 200 மைல்கள் சுற்றளவில் டசின் கணக்கான கிராமங்கள் மற்றும் நகரங்கள் தரைமட்டமாகியுள்ளன.

ஆயிரக்கணக்கான மக்கள் மீட்பு நடவடிக்கையில் களமிறக்கப்பட்டுள்ளனர். அடுத்த 24 முதல் 48 மணி நேரம் மிக முக்கியம் எனவும் கூறுகின்றனர்.


முதல் நிலநடுக்கம் பதிவான பின்னர் சுமார் 200 நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

துருக்கி இடிபாடுகளுக்கு சிக்கிய மகள் நெஞ்சை உலுக்கும் தந்தையின் செயல் துருக்கி மற்றும் சிரியாவை மொத்தமாக புரட்டிப்போட்டுள்ள நிலநடுக்கத்தில் இதுவரை 7,200 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் தொடர்பில் நெஞ்சை உலுக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.கட்டட இடிபாடுகளில் சிக்கி புதைந்துபோயுள்ள இளம் வயது மகளின் கைகளை கோர்த்தபடி, தந்தை ஒருவர் காத்திருக்கும் நொறுங்க வைக்கும் காட்சி பலரையும் கலங்கடித்துள்ளது.15 வயதேயான சிறுமி மொத்தமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொள்ள, தந்தை Mesut Hancer தமது மகளின் வெளியேத் தெரியும் கைகளை மட்டும் கோர்த்தபடி காணப்பட்டுள்ளார்.இந்த காட்சி அனைவரின் மனதையும் கலங்கடித்துள்ளது.இதேவேளை ஆயிரக்கணக்கான சிறார்கள் இடிபாடுகளில் சிக்கி மரணமடைந்திருக்கலாம் எனவும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.கடும் குளிர், பனிப்பொழிவு காரணமாக மீட்பு நடவடிக்கைகள் தாமதமாவதாகவும் கூறப்படுகிறது.இதனிடையே, உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கையில், இரண்டு நாடுகளிலும் மொத்தமாக இறப்பு எண்ணிக்கை 20,000 தொடலாம் எனவும் 1.4 மில்லியன் சிறார்கள் உட்பட மொத்தம் 23 மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.சுமார் 200 மைல்கள் சுற்றளவில் டசின் கணக்கான கிராமங்கள் மற்றும் நகரங்கள் தரைமட்டமாகியுள்ளன.ஆயிரக்கணக்கான மக்கள் மீட்பு நடவடிக்கையில் களமிறக்கப்பட்டுள்ளனர். அடுத்த 24 முதல் 48 மணி நேரம் மிக முக்கியம் எனவும் கூறுகின்றனர்.முதல் நிலநடுக்கம் பதிவான பின்னர் சுமார் 200 நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement