உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இமாம் மற்றும் அல்விஸ் அறிக்கைகளையும் படலந்த சம்பவம் தொடர்பான அறிக்கையையும் அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(08) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்திலேயே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் மொத்த ஊழியர்ப்படையில் 66.6 சதவீதம் ஆண்களின் பங்களிப்பும், 31.3 சதவீதம் பெண்களின் பங்களிப்பும் காணப்படுகிறது.
இன்றும் பெரும்பாலான பெண்கள் இல்லத்தரசிகளாக வாழும் நிலைமை காணப்படுகிறது. பெண்களின் முன்னேற்றத்துக்கு அமைய இந்நிலைமை மாற்றம் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள 25 சதவீத பிரதிநிதித்துவ ஒதுக்கீட்டை நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களிலும் வழங்க வேண்டும்.
இதற்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் கூறியுள்ளார்.
கற்பழிப்பு சம்பவம் தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகாலம் இழுத்தடிக்கப்படுவதால் பாதிக்கப்படும் பெண்கள் உளவியல் ரீதியிலும் சமூக மட்டத்திலும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
ஆகவே கற்பழிப்பு தொடர்பான வழக்குகளை விசேட நீதிமன்றம் ஊடாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நீதியமைச்சிடம் வலியுறுத்துகிறேன்.
புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் இரண்டாவது சந்தேகநபரான செவ்வந்தியை காணவில்லை. அவரை உடனடியாக பிடித்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். என்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை சபைப்படுத்தவும் – அரசிடம் தயாசிறி கோரிக்கை உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இமாம் மற்றும் அல்விஸ் அறிக்கைகளையும் படலந்த சம்பவம் தொடர்பான அறிக்கையையும் அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று(08) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்திலேயே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.நாட்டில் மொத்த ஊழியர்ப்படையில் 66.6 சதவீதம் ஆண்களின் பங்களிப்பும், 31.3 சதவீதம் பெண்களின் பங்களிப்பும் காணப்படுகிறது.இன்றும் பெரும்பாலான பெண்கள் இல்லத்தரசிகளாக வாழும் நிலைமை காணப்படுகிறது. பெண்களின் முன்னேற்றத்துக்கு அமைய இந்நிலைமை மாற்றம் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.உள்ளூராட்சிமன்ற தேர்தலில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள 25 சதவீத பிரதிநிதித்துவ ஒதுக்கீட்டை நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களிலும் வழங்க வேண்டும்.இதற்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் கூறியுள்ளார்.கற்பழிப்பு சம்பவம் தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகாலம் இழுத்தடிக்கப்படுவதால் பாதிக்கப்படும் பெண்கள் உளவியல் ரீதியிலும் சமூக மட்டத்திலும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.ஆகவே கற்பழிப்பு தொடர்பான வழக்குகளை விசேட நீதிமன்றம் ஊடாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நீதியமைச்சிடம் வலியுறுத்துகிறேன்.புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் இரண்டாவது சந்தேகநபரான செவ்வந்தியை காணவில்லை. அவரை உடனடியாக பிடித்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். என்றார்.