• May 07 2024

இலங்கையில் தரமற்ற மருந்துகளால் நோயாளர்கள் மரணிப்பது அதிகரிப்பு! அதிர்ச்சித் தகவல் samugammedia

Chithra / Jul 3rd 2023, 1:21 pm
image

Advertisement

கடந்த வாரம் ராகம வைத்தியாசாலையில்  23 வயது பெண் ஒருவர்  உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அன்டிபயோட்டிக் மருந்துகளை பயன்படுத்துவதை விலக்கிக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அனைத்து மருத்துவமனைகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.

ராகம வைத்தியாசாலையில் தடுப்பூசி செலுத்தப்பட்டதை தொடர்ந்து 23 வயது தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

27 ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறிப்பிட்ட மருந்து ஒவ்வாமையே அவரின் மரணத்திற்கு காரணமாகயிருக்கலாம் என மருத்துவ ஆய்வக அறிவியல் கல்லூரி தெரிவித்துள்ளது.

அவருக்கு தடுப்பூசி மூலம் வழங்கப்பட்ட அன்டிபயோட்டிக்கின் ஒவ்வாமையே அவரின் மரணத்திற்கு காரணம் என சந்தேகம் நிலவுவதாக ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட மருந்தினால் கடும் ஒவ்வாமை ஏற்படுகின்றது என கடந்த காலங்களில் முறைப்பாடுகள் வெளியான போதிலும் வழமையான ஒவ்வாமை என அந்த முறைப்பாடுகள் நிராகரிக்கப்பட்டதாக மருத்துவ ஆய்வக அறிவியல் கல்லூரியின் தலைவர் ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

ஒரு பிள்ளையின் தாயாரான ஜாஎல வடக்கு பதகமவை சேர்ந்த 23 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார்.

அவரின் நோயை குணப்படுத்துவதற்காக தடுப்பூசி மூலம் வழங்கப்பட்ட அன்டிபயோட்டிக் மருந்தே இதற்கு காரணம் என பிரேதபரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன என தெரிவித்துள்ள ரவிகுமுதேஸ் தரமற்ற மருந்துகளினால் நோயாளிகள் மரணிப்பது அதிகரிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

சில மருத்துவ கிசிச்சைகளும் இதற்கு காரணம் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

ஆனால் இவை மறைக்கப்படுகின்றன ஆனால் வழமையானவை என நிராகரிக்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் பொதுமக்களிடமிருந்து இது தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக  சுயாதீன குழுவொன்றை அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தரமற்ற மருந்துகளால் நோயாளர்கள் மரணிப்பது அதிகரிப்பு அதிர்ச்சித் தகவல் samugammedia கடந்த வாரம் ராகம வைத்தியாசாலையில்  23 வயது பெண் ஒருவர்  உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அன்டிபயோட்டிக் மருந்துகளை பயன்படுத்துவதை விலக்கிக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அனைத்து மருத்துவமனைகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.ராகம வைத்தியாசாலையில் தடுப்பூசி செலுத்தப்பட்டதை தொடர்ந்து 23 வயது தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.27 ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணே உயிரிழந்துள்ளார்.குறிப்பிட்ட மருந்து ஒவ்வாமையே அவரின் மரணத்திற்கு காரணமாகயிருக்கலாம் என மருத்துவ ஆய்வக அறிவியல் கல்லூரி தெரிவித்துள்ளது.அவருக்கு தடுப்பூசி மூலம் வழங்கப்பட்ட அன்டிபயோட்டிக்கின் ஒவ்வாமையே அவரின் மரணத்திற்கு காரணம் என சந்தேகம் நிலவுவதாக ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.குறிப்பிட்ட மருந்தினால் கடும் ஒவ்வாமை ஏற்படுகின்றது என கடந்த காலங்களில் முறைப்பாடுகள் வெளியான போதிலும் வழமையான ஒவ்வாமை என அந்த முறைப்பாடுகள் நிராகரிக்கப்பட்டதாக மருத்துவ ஆய்வக அறிவியல் கல்லூரியின் தலைவர் ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு பிள்ளையின் தாயாரான ஜாஎல வடக்கு பதகமவை சேர்ந்த 23 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார்.அவரின் நோயை குணப்படுத்துவதற்காக தடுப்பூசி மூலம் வழங்கப்பட்ட அன்டிபயோட்டிக் மருந்தே இதற்கு காரணம் என பிரேதபரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன என தெரிவித்துள்ள ரவிகுமுதேஸ் தரமற்ற மருந்துகளினால் நோயாளிகள் மரணிப்பது அதிகரிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.சில மருத்துவ கிசிச்சைகளும் இதற்கு காரணம் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.ஆனால் இவை மறைக்கப்படுகின்றன ஆனால் வழமையானவை என நிராகரிக்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் பொதுமக்களிடமிருந்து இது தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக  சுயாதீன குழுவொன்றை அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement