தம்புள்ளை - மகந்தனை பிரதேசத்தில் நபர் ஒருவர் கடன் தவணையை செலுத்த முடியாமல் தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.
குறித்த நபர் தனியார் நிதி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபா கடன் வாங்கி,
மாதம் ரூ.34 ஆயிரம் தருவதாக உறுதியளித்ததாகவும், அதை திருப்பி செலுத்த முடியாமல் மனமுடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தொழில் நடவடிக்கைகளில் ஏற்பட்ட இடையூறு காரணமாக இந்த கடன் தொகையை செலுத்த முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
பல தவணை கட்ட முடியாததால், கடன் தொகையை அடிக்கடி செலுத்த நிதி நிறுவனமும், கடன் உத்தரவாததாரர்களும் தொந்தரவு செய்துள்ளதாக தெரியவருகின்றது..
உயிரிழந்தவர் 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பஸ்தரின் உயிரை பறித்த கடன். இலங்கையில் பெரும் சோகம். தம்புள்ளை - மகந்தனை பிரதேசத்தில் நபர் ஒருவர் கடன் தவணையை செலுத்த முடியாமல் தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். குறித்த நபர் தனியார் நிதி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபா கடன் வாங்கி, மாதம் ரூ.34 ஆயிரம் தருவதாக உறுதியளித்ததாகவும், அதை திருப்பி செலுத்த முடியாமல் மனமுடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.தொழில் நடவடிக்கைகளில் ஏற்பட்ட இடையூறு காரணமாக இந்த கடன் தொகையை செலுத்த முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. பல தவணை கட்ட முடியாததால், கடன் தொகையை அடிக்கடி செலுத்த நிதி நிறுவனமும், கடன் உத்தரவாததாரர்களும் தொந்தரவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.உயிரிழந்தவர் 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.