• Oct 18 2025

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

Chithra / Oct 16th 2025, 10:40 am
image

 

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட ஆறு பேரிடம் மேலும் விசாரணைகளை நடத்துவதற்கு தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, "கணேமுல்ல சஞ்சீவ" கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் அறுவர் நேற்று மாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். 

இதில் இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவிலும் மற்றைய இரு சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வு பிரிவின் பேலியகொட பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

தற்போது இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்குத் தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு  இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட ஆறு பேரிடம் மேலும் விசாரணைகளை நடத்துவதற்கு தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, "கணேமுல்ல சஞ்சீவ" கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் அறுவர் நேற்று மாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவிலும் மற்றைய இரு சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வு பிரிவின் பேலியகொட பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்குத் தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement