• Oct 18 2025

இந்திய அகதி முகாமில் இருந்து மீண்டும் தயாகம் திரும்பிய குடும்பம்

Chithra / Oct 16th 2025, 10:50 am
image


இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் கோரிய நிலையில் நீண்ட நாட்களாக முகாமில் வசித்து வந்துள்ளதாக தெரியவருகிறது. 

இலங்கையில் இயல்பு வாழ்வு திரும்புவதாக கிடைத்த செய்திகளின் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு தமிழ் நாட்டில் இருந்து படகில் புறப்பட்டு மன்னார் பேசாலை கடற்பரப்பை வந்தடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

அவர்கள் தாமாகவே பேசாலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

இதையடுத்து குறித்த நால்வரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்திய அகதி முகாமில் இருந்து மீண்டும் தயாகம் திரும்பிய குடும்பம் இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் கோரிய நிலையில் நீண்ட நாட்களாக முகாமில் வசித்து வந்துள்ளதாக தெரியவருகிறது. இலங்கையில் இயல்பு வாழ்வு திரும்புவதாக கிடைத்த செய்திகளின் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு தமிழ் நாட்டில் இருந்து படகில் புறப்பட்டு மன்னார் பேசாலை கடற்பரப்பை வந்தடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் தாமாகவே பேசாலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதையடுத்து குறித்த நால்வரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement