“வெள்ளைப்பிரம்பே எங்கள் விழி நரம்பு” என்ற தொனிப்பொருளில் நல்லூர் பிரதேச செயலகத்தால்
நல்லூரில் விழிப்புணர்வு ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் ஒக்டோபர் 15 ஆம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
அதற்கமையவே நல்லூர் பிரதேச செயலகத்தின் மாற்றுவலுவுடைய சுய உதவிக்குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை நல்லூரில் விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.
காலை 8.30 மணிக்கு நல்லூர் கோயில் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு நல்லூர் பிரதேச செயலகம் வரை நடைபவனியாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பிரதேச செயலக அலுவலர்களால் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான வசதிகள், அவர்களுக்கு மக்கள் எவ்வாறு உதவ வேண்டும் என்பது தொடர்பில் தெளிவுபடுத்தினர்.
அதுமட்டுமன்றி பேருந்துகளும் மாற்றுத்திறனாளிகளை ஏற்றாது செல்கின்றது. எனவே அவர்களுக்கு மதிப்புக் கொடுத்து அவர்களையும் சக மனிதர்கள் போன்று பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளைப்பிரம்பே எங்கள் விழி நரம்பு - நல்லூர் பிரதேச செயலகத்தால் விழிப்புணர்வு “வெள்ளைப்பிரம்பே எங்கள் விழி நரம்பு” என்ற தொனிப்பொருளில் நல்லூர் பிரதேச செயலகத்தால் நல்லூரில் விழிப்புணர்வு ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் ஒக்டோபர் 15 ஆம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதற்கமையவே நல்லூர் பிரதேச செயலகத்தின் மாற்றுவலுவுடைய சுய உதவிக்குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை நல்லூரில் விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது. காலை 8.30 மணிக்கு நல்லூர் கோயில் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு நல்லூர் பிரதேச செயலகம் வரை நடைபவனியாக முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பிரதேச செயலக அலுவலர்களால் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான வசதிகள், அவர்களுக்கு மக்கள் எவ்வாறு உதவ வேண்டும் என்பது தொடர்பில் தெளிவுபடுத்தினர்.அதுமட்டுமன்றி பேருந்துகளும் மாற்றுத்திறனாளிகளை ஏற்றாது செல்கின்றது. எனவே அவர்களுக்கு மதிப்புக் கொடுத்து அவர்களையும் சக மனிதர்கள் போன்று பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.