• Sep 19 2024

இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் தீர்மானம் தொடர்ந்தும் இழுபறி – நாளை கச்சதீவில் பேச்சுவார்தை! SamugamMedia

Chithra / Mar 2nd 2023, 12:38 pm
image

Advertisement

நாளையதினம் கச்சதீவில் இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமானஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று காலை யாழ். மாவட்ட அபிவிருத்தி முன்னாயத்த கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் புதுக்கோட்டை காரைக்கால் நாகபட்டினம் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பங்குகொள்ளும் இந்திய மீனவர்கள் இந்த இராஜதந்திர சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேழள ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியப் படகுகளில் 4 அரச உடைமையாக்கப்பட்டுள்ளதுடன் 4 படகுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

எனினும் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் முறை தொடர்பில் எந்த முடிவும் எட்டப்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மன்னார் ஆகிய மாவட்டங்களில் இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட கடலட்டைப்பண்ணைகள் உள்ளதாகவும்  இதன்மூலம் கடந்த வருடம் 7666 மில்லியன் ரூபாவை நாட்டிற்கு ஈட்டித் தந்ததுடன் 3000 பேர் வரையில் சிறந்த வாழ்வாதாரத்தையும் பெற்றுள்ளதாக இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் தீர்மானம் தொடர்ந்தும் இழுபறி – நாளை கச்சதீவில் பேச்சுவார்தை SamugamMedia நாளையதினம் கச்சதீவில் இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமானஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று காலை யாழ். மாவட்ட அபிவிருத்தி முன்னாயத்த கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.இதன்போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்தியாவின் புதுக்கோட்டை காரைக்கால் நாகபட்டினம் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பங்குகொள்ளும் இந்திய மீனவர்கள் இந்த இராஜதந்திர சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேழள ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியப் படகுகளில் 4 அரச உடைமையாக்கப்பட்டுள்ளதுடன் 4 படகுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.எனினும் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் முறை தொடர்பில் எந்த முடிவும் எட்டப்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.யாழ்ப்பாணம் கிளிநொச்சி மன்னார் ஆகிய மாவட்டங்களில் இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட கடலட்டைப்பண்ணைகள் உள்ளதாகவும்  இதன்மூலம் கடந்த வருடம் 7666 மில்லியன் ரூபாவை நாட்டிற்கு ஈட்டித் தந்ததுடன் 3000 பேர் வரையில் சிறந்த வாழ்வாதாரத்தையும் பெற்றுள்ளதாக இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement