• May 02 2024

திருமலையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை அறிவுறுத்தும் எல்லை நிர்ணய மாவட்ட கலந்துரையாடல்!

Sharmi / Dec 30th 2022, 12:33 pm
image

Advertisement

தற்போது உள்ள உள்ளூர் அதிகாரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படும் முறைமை குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை அறிவுறுத்தும் எல்லை நிர்ணய மாவட்ட கலந்துரையாடல் நேற்று (29) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நடைபெற்றது.

இதன்போது எல்லை நிர்ணயம் தொடர்பாக அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மூலம் வழங்கப்பட்ட முன்மொழிவுகளை அடிப்படையாக கொண்டதாக இக்கலந்துரையாடல் அமையப்பெற்றதுடன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவிலமைப்புக்களின் கருத்துக்களும் அலசி ஆராயப்பட்டன.

இந்நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல, எம்.எஸ்.தெளபீக், உள்ளூர் அதிகாரசபை தவிசாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம, ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், மேலதிக அரசாங்க அதிபர்களான ஜே.எஸ்.அருள்ராஜ், எஸ்.சுதாகாரன் ,அரசியல் கட்சி பிரதிநிதிகள், உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

திருமலையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை அறிவுறுத்தும் எல்லை நிர்ணய மாவட்ட கலந்துரையாடல் தற்போது உள்ள உள்ளூர் அதிகாரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படும் முறைமை குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை அறிவுறுத்தும் எல்லை நிர்ணய மாவட்ட கலந்துரையாடல் நேற்று (29) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நடைபெற்றது.இதன்போது எல்லை நிர்ணயம் தொடர்பாக அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மூலம் வழங்கப்பட்ட முன்மொழிவுகளை அடிப்படையாக கொண்டதாக இக்கலந்துரையாடல் அமையப்பெற்றதுடன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவிலமைப்புக்களின் கருத்துக்களும் அலசி ஆராயப்பட்டன.இந்நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல, எம்.எஸ்.தெளபீக், உள்ளூர் அதிகாரசபை தவிசாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம, ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், மேலதிக அரசாங்க அதிபர்களான ஜே.எஸ்.அருள்ராஜ், எஸ்.சுதாகாரன் ,அரசியல் கட்சி பிரதிநிதிகள், உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement