• Nov 23 2024

இலங்கையர்களை வாட்டும் வெப்பம் - வெள்ளரிப்பழத்திற்கு வந்த கிராக்கி

Chithra / Mar 17th 2024, 12:05 pm
image

தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் கரையோர பகுதி பிரதான வீதியோரங்களில் வெள்ளரிப்பழம் விற்பனை செய்யப்படுவதுடன் மக்களும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.

மேலும் இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, காரைதீவு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பகுதிகளில்  வெள்ளரிப்பழம் விற்பனை செய்யப்படுவதை காண முடிந்தது.

தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள உடல் உஸ்ணத்தை தடுக்கும் பொருட்டு வெள்ளரிப்பழம் சாப்பிடுவதில் மக்கள் அதிக நாட்டம் கொண்டு வருகின்றனர்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்திற்கு  அதிக கிராக்கி

ஏற்பட்டுள்ளதுடன், 300 ரூபாய் முதல் சுமார் 1000 ரூபாய் வரை இவ் வெள்ளரிப்பழம்  விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இவ்வகை பழம் பெரும்பாலும் வெப்பமான  காலங்களிலேயே அதிகமாக விளைச்சலாகின்றமை   குறிப்பிடத்தக்கது. 


இலங்கையர்களை வாட்டும் வெப்பம் - வெள்ளரிப்பழத்திற்கு வந்த கிராக்கி தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் கரையோர பகுதி பிரதான வீதியோரங்களில் வெள்ளரிப்பழம் விற்பனை செய்யப்படுவதுடன் மக்களும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.மேலும் இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, காரைதீவு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பகுதிகளில்  வெள்ளரிப்பழம் விற்பனை செய்யப்படுவதை காண முடிந்தது.தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள உடல் உஸ்ணத்தை தடுக்கும் பொருட்டு வெள்ளரிப்பழம் சாப்பிடுவதில் மக்கள் அதிக நாட்டம் கொண்டு வருகின்றனர்.மேலும் அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்திற்கு  அதிக கிராக்கிஏற்பட்டுள்ளதுடன், 300 ரூபாய் முதல் சுமார் 1000 ரூபாய் வரை இவ் வெள்ளரிப்பழம்  விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.இவ்வகை பழம் பெரும்பாலும் வெப்பமான  காலங்களிலேயே அதிகமாக விளைச்சலாகின்றமை   குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement