• Nov 26 2024

தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் கட்சிகளை ஒதுங்குமாறு கோரிக்கை!

Chithra / Oct 3rd 2024, 2:51 pm
image

 

தேர்தலில் களமிறங்க உள்ள ஏனைய இதர கட்சிகள் தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் இந்த கட்சிகள் தயவு செய்து எங்களுடைய மாவட்டத்தின் நிலையை கருத்தில் கொண்டு தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதே மக்களுக்குச் செய்யும் கைங்கரியம் என கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் செயலாளரும் ஊடகப் பேச்சாளரும் ஓய்வு பெற்ற பிரதி கல்வி பணிப்பாளருமான குணாளன் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை(2)  இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

பல்வேறு இன்னல்களை தொடர்ந்து அனுபவித்து வருகின்ற மக்களுடைய இன்னல்களை கருத்தில் கொண்டு இந்த விடயத்தைதை பதிவிட விரும்புவதாகவும் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் செயலாளர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டு தேசிய பட்டியல் ஊடாக ஒரு பிரதிநிதி நியமிக்கப்பட்டது தற்போதைய நிலை. ஆனால் கடந்த காலத்தில் அவ்வாறில்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து பிரதிநிதி ஒன்றை தெரிவு செய்தது வரலாறு.

 ஆனால் தற்போது அம்பாறை மாவட்டத்தை இலக்கு வைத்து பல்வேறு குழுக்கள் கட்சிகள் எல்லாம் வாக்குப்பதிவுகளை பெறுவதற்காக முனைந்து கொண்டிருக்கிறார்கள்.

இதனை தீர்மானிப்பது வாக்காளர் பெருமக்களே இன்று தேசிய கட்சிகளிடையே பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகிறது. இது எங்களுடைய மக்களை வெறுப்புக்குள்ளாக்கும் நிலைக்கு ஆக்கப்பட்டுள்ளது. 

முதலில் ஒரு தமிழ் பேசும் ஒருவர் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட வேண்டும். எனவே இந்த தேர்தலில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிய வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை.

தமிழரசு கட்சி உட்பட பிரிந்து கிடக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு கூரையின்கீழ் செயல்பட வேண்டும். இவ்வாறு செயல்பட முன் வருவதனால் நிச்சயமாக பிரதேசத்தில் தமிழர் பிரதிநிதிதுவம் பாதுகாக்கப்படும்.

தேர்தல் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை காரணம் கடந்த ஜனாதிபதி தேர்தல் இதற்கான ஒரு பாடமாக அமைந்திருந்தது.

மேலும் பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் பொருத்தமானவர் யாராக இருந்தாலும் ஒரு கட்சியில் உள்ள ஒருவரை தெரிவு செய்வது இந்த பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்கான ஒரு செயற்பாடு எனவும் அவர் தெரிவித்திருந்தார்

மக்களை அடிமைகளை ஆக்கி வேறு ஆசா வார்த்தைகளை காட்டி அவர்களை திசை திருப்பி விட வேண்டாம் ஏனையய தேசிய கட்சிகளிடம் நாங்கள் கேட்டுக் கொள்வது மேலும் சிறிய கட்சிகளும் உள்ளே புகுந்து இருக்கும் நிலையை குழப்பி விட வேண்டாம் எனவும் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்


தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் கட்சிகளை ஒதுங்குமாறு கோரிக்கை  தேர்தலில் களமிறங்க உள்ள ஏனைய இதர கட்சிகள் தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் இந்த கட்சிகள் தயவு செய்து எங்களுடைய மாவட்டத்தின் நிலையை கருத்தில் கொண்டு தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதே மக்களுக்குச் செய்யும் கைங்கரியம் என கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் செயலாளரும் ஊடகப் பேச்சாளரும் ஓய்வு பெற்ற பிரதி கல்வி பணிப்பாளருமான குணாளன் தெரிவித்துள்ளார்.நேற்று புதன்கிழமை(2)  இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.பல்வேறு இன்னல்களை தொடர்ந்து அனுபவித்து வருகின்ற மக்களுடைய இன்னல்களை கருத்தில் கொண்டு இந்த விடயத்தைதை பதிவிட விரும்புவதாகவும் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் செயலாளர் குறிப்பிட்டிருந்தார்.கடந்த தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டு தேசிய பட்டியல் ஊடாக ஒரு பிரதிநிதி நியமிக்கப்பட்டது தற்போதைய நிலை. ஆனால் கடந்த காலத்தில் அவ்வாறில்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து பிரதிநிதி ஒன்றை தெரிவு செய்தது வரலாறு. ஆனால் தற்போது அம்பாறை மாவட்டத்தை இலக்கு வைத்து பல்வேறு குழுக்கள் கட்சிகள் எல்லாம் வாக்குப்பதிவுகளை பெறுவதற்காக முனைந்து கொண்டிருக்கிறார்கள்.இதனை தீர்மானிப்பது வாக்காளர் பெருமக்களே இன்று தேசிய கட்சிகளிடையே பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகிறது. இது எங்களுடைய மக்களை வெறுப்புக்குள்ளாக்கும் நிலைக்கு ஆக்கப்பட்டுள்ளது. முதலில் ஒரு தமிழ் பேசும் ஒருவர் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட வேண்டும். எனவே இந்த தேர்தலில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிய வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை.தமிழரசு கட்சி உட்பட பிரிந்து கிடக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு கூரையின்கீழ் செயல்பட வேண்டும். இவ்வாறு செயல்பட முன் வருவதனால் நிச்சயமாக பிரதேசத்தில் தமிழர் பிரதிநிதிதுவம் பாதுகாக்கப்படும்.தேர்தல் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை காரணம் கடந்த ஜனாதிபதி தேர்தல் இதற்கான ஒரு பாடமாக அமைந்திருந்தது.மேலும் பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் பொருத்தமானவர் யாராக இருந்தாலும் ஒரு கட்சியில் உள்ள ஒருவரை தெரிவு செய்வது இந்த பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்கான ஒரு செயற்பாடு எனவும் அவர் தெரிவித்திருந்தார்மக்களை அடிமைகளை ஆக்கி வேறு ஆசா வார்த்தைகளை காட்டி அவர்களை திசை திருப்பி விட வேண்டாம் ஏனையய தேசிய கட்சிகளிடம் நாங்கள் கேட்டுக் கொள்வது மேலும் சிறிய கட்சிகளும் உள்ளே புகுந்து இருக்கும் நிலையை குழப்பி விட வேண்டாம் எனவும் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement