• May 17 2024

நாட்டில் வேகமாக பரவும் டெங்கு நோய் - தாதியர்களுக்கு ஏற்பட்ட நிலை! samugammedia

Chithra / Jul 24th 2023, 9:23 am
image

Advertisement

நாட்டில் தற்போது டெங்கு நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அரச வைத்தியசாலைகளில் தாதியர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரச வைத்தியசாலைகளில் தற்போதுள்ள தாதியர்கள் விடுமுறையை பெற்றுக் கொள்ளாமல் பணிக்கு வரவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருட ஆரம்பம் முதல் நேற்று வரை நாட்டில் 54 ஆயிரத்து அறுநூற்றி ஒரு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, ஜூலை மாதத்தில் மாத்திரம் ஐயாயிரத்து நூற்றி இருபது டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டின் ஐம்பது பிரதேச செயலாளர் பிரிவுகள், டெங்கு அபாய வலயங்களாக சுகாதார அமைச்சினால் பெயரிட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.


நாட்டில் வேகமாக பரவும் டெங்கு நோய் - தாதியர்களுக்கு ஏற்பட்ட நிலை samugammedia நாட்டில் தற்போது டெங்கு நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அரச வைத்தியசாலைகளில் தாதியர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக அரச வைத்தியசாலைகளில் தற்போதுள்ள தாதியர்கள் விடுமுறையை பெற்றுக் கொள்ளாமல் பணிக்கு வரவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த வருட ஆரம்பம் முதல் நேற்று வரை நாட்டில் 54 ஆயிரத்து அறுநூற்றி ஒரு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, ஜூலை மாதத்தில் மாத்திரம் ஐயாயிரத்து நூற்றி இருபது டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.இந்நிலையில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, நாட்டின் ஐம்பது பிரதேச செயலாளர் பிரிவுகள், டெங்கு அபாய வலயங்களாக சுகாதார அமைச்சினால் பெயரிட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement