• Oct 02 2024

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு குழு கூட்டம்..!

Sharmi / Oct 2nd 2024, 12:11 pm
image

Advertisement

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் டெங்கு குழுக் கூட்டமானது பதில் மாவட்ட செயலாளர் எஸ்.முரளிதரன் தலைமையில் இன்று(02) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது மாவட்ட தொற்றுநோயியல் வைத்திய அதிகாரி Dr.க.றஞ்சன், டெங்கு நோய் தாக்கம் மற்றும் மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்தார்.

வடகீழ் பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளவேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.

மாவட்டத்தின் அடையாளப்படுத்தப்பட்டுள்ள முக்கிய இடங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டன. 

இத்தனைவிட மாவட்டத்தில் கடந்த காலங்களில் டெங்கு பரவிய விதம், டெங்குவை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் மழைக்காலம் காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள பகுதிகளை கண்டறிந்து வாராந்த முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிப்பது பற்றியும் பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்(காணி) சுகாதார திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக  மற்றும் பிரதேச செயலகங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பொலிஸ் இராணுவ அதிகாரிகள் மற்றும் துறைசார்ந்த திணைக்களங்களின் அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.




கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு குழு கூட்டம். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் டெங்கு குழுக் கூட்டமானது பதில் மாவட்ட செயலாளர் எஸ்.முரளிதரன் தலைமையில் இன்று(02) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது மாவட்ட தொற்றுநோயியல் வைத்திய அதிகாரி Dr.க.றஞ்சன், டெங்கு நோய் தாக்கம் மற்றும் மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்தார்.வடகீழ் பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளவேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.மாவட்டத்தின் அடையாளப்படுத்தப்பட்டுள்ள முக்கிய இடங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டன. இத்தனைவிட மாவட்டத்தில் கடந்த காலங்களில் டெங்கு பரவிய விதம், டெங்குவை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மேலும் மழைக்காலம் காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள பகுதிகளை கண்டறிந்து வாராந்த முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிப்பது பற்றியும் பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.குறித்த கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்(காணி) சுகாதார திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக  மற்றும் பிரதேச செயலகங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பொலிஸ் இராணுவ அதிகாரிகள் மற்றும் துறைசார்ந்த திணைக்களங்களின் அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement