• May 17 2024

யாழில் டெங்கு ஒழிப்பு; 111 பேருக்கு எச்சரிக்கை - 09 பேருக்கு எதிராக வழக்கு!

Chithra / Jan 11th 2023, 1:50 pm
image

Advertisement

யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது 09 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 111 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சிவப்பு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளதாக மாநகர சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

பருவ மழையினை அடுத்து யாழில் டெங்கு நுளம்பின் அதிகரிப்பு காரணமாக , யாழில். டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்தது. கடந்த ஆண்டில் 09 பேர் டெங்கு காய்ச்சலினால் யாழில். உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில் யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது , ஆயிரத்து 505 குடியிருப்புக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அதன் போது 74 குடியிருப்புக்களில் டெங்கு குடம்பிகள் காணப்பட்டன. அதில் 65 குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் , 09 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதேவேளை , டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழல் காணப்பட்ட 111 குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு , அவர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

யாழில் டெங்கு ஒழிப்பு; 111 பேருக்கு எச்சரிக்கை - 09 பேருக்கு எதிராக வழக்கு யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது 09 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 111 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சிவப்பு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளதாக மாநகர சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.பருவ மழையினை அடுத்து யாழில் டெங்கு நுளம்பின் அதிகரிப்பு காரணமாக , யாழில். டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்தது. கடந்த ஆண்டில் 09 பேர் டெங்கு காய்ச்சலினால் யாழில். உயிரிழந்திருந்தனர்.இந்நிலையில் யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது , ஆயிரத்து 505 குடியிருப்புக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.அதன் போது 74 குடியிருப்புக்களில் டெங்கு குடம்பிகள் காணப்பட்டன. அதில் 65 குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் , 09 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.அதேவேளை , டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழல் காணப்பட்ட 111 குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு , அவர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement