• Nov 29 2024

புதுக்குடியிருப்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை- அதிரடியாக களம் இறங்கிய அதிகாரிகள்..!

Sharmi / Oct 16th 2024, 2:55 pm
image

புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார வைத்திய பணிமனையின் ஏற்பாட்டில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விழிப்புணர்வு, துப்பரவு பணிகள் இன்றையதினம்(16) காலை இடம்பெற்றது.

தற்போது மழையுடன் கூடிய  காலமாகையால் டெங்கு நோய் வேகமாக பரவிவரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

அதனை கட்டுப்படுத்தும்  நோக்கில் புதுக்குடியிருப்பு பிராந்திய பணிமனையின் ஏற்பாட்டில், சுகாதார வைத்திய அதிகாரி பி.சத்தியரூபன்  தலைமையில்  புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினருடன் இணைந்து புதுக்குடியிருப்பு நகரை அண்மித்துள்ள பகுதிகளில்  துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பரிசோதனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

டெங்கு பரிசோதனை நடவடிக்கையின் போது டெங்கு நோய் பரவும் சாத்தியமாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளிற்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன் துப்பரவு செய்யப்படாத காணிகள், வெற்று காணிகள், கடைகளின் உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய தொற்றுநோய் வைத்திய அதிகாரி வி.விஜிதரன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழுள்ள சமுர்த்தி பயனாளர்கள், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், புதுக்குடியிருப்பு பொலிஸார், ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு துப்பரவு பணியினை மேற்கொண்டிருந்தனர்.


புதுக்குடியிருப்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை- அதிரடியாக களம் இறங்கிய அதிகாரிகள். புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார வைத்திய பணிமனையின் ஏற்பாட்டில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விழிப்புணர்வு, துப்பரவு பணிகள் இன்றையதினம்(16) காலை இடம்பெற்றது.தற்போது மழையுடன் கூடிய  காலமாகையால் டெங்கு நோய் வேகமாக பரவிவரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்தும்  நோக்கில் புதுக்குடியிருப்பு பிராந்திய பணிமனையின் ஏற்பாட்டில், சுகாதார வைத்திய அதிகாரி பி.சத்தியரூபன்  தலைமையில்  புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினருடன் இணைந்து புதுக்குடியிருப்பு நகரை அண்மித்துள்ள பகுதிகளில்  துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பரிசோதனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.டெங்கு பரிசோதனை நடவடிக்கையின் போது டெங்கு நோய் பரவும் சாத்தியமாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளிற்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்தது.அத்துடன் துப்பரவு செய்யப்படாத காணிகள், வெற்று காணிகள், கடைகளின் உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.குறித்த நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய தொற்றுநோய் வைத்திய அதிகாரி வி.விஜிதரன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழுள்ள சமுர்த்தி பயனாளர்கள், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், புதுக்குடியிருப்பு பொலிஸார், ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு துப்பரவு பணியினை மேற்கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement