• Apr 02 2025

உயர்தரப் பரீட்சைக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்..!

Chithra / Dec 27th 2023, 12:25 pm
image


கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஜனவரி மாதம் முழுவதும் இடம்பெறவுள்ள நிலையில், 

நாடளாவிய ரீதியிலுள்ள பரீட்சை நிலைய வளாகங்களையும் சுத்தப்படுத்துவந்தற்கான விசேட வேலைத்திட்டம் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக அந்த சங்கத்தின் தலைவர் நிஜித் சுமனசேன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தற்போது நாளாந்த டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

மழையுடனான காலநிலை குறைவடைந்தாலும் நுளம்புகள் பரவுவதற்கு சாதகமான நிலைமைகள் உள்ளன. 

 தேசிய டெங்கு ஒழிப்பு அறிவுறுத்தலின்படி, பரீட்சை நடைபெறும் பாடசாலைகளில் இந்த டெங்கு ஒழிப்பு வேலைதிட்டம் செயல்படுத்தப்படும். என்று குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சைக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம். கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஜனவரி மாதம் முழுவதும் இடம்பெறவுள்ள நிலையில், நாடளாவிய ரீதியிலுள்ள பரீட்சை நிலைய வளாகங்களையும் சுத்தப்படுத்துவந்தற்கான விசேட வேலைத்திட்டம் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இன்று ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக அந்த சங்கத்தின் தலைவர் நிஜித் சுமனசேன தெரிவித்துள்ளார்.இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,தற்போது நாளாந்த டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மழையுடனான காலநிலை குறைவடைந்தாலும் நுளம்புகள் பரவுவதற்கு சாதகமான நிலைமைகள் உள்ளன.  தேசிய டெங்கு ஒழிப்பு அறிவுறுத்தலின்படி, பரீட்சை நடைபெறும் பாடசாலைகளில் இந்த டெங்கு ஒழிப்பு வேலைதிட்டம் செயல்படுத்தப்படும். என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement