• May 02 2024

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு பரவல்! விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Chithra / Dec 14th 2022, 10:57 am
image

Advertisement

நாட்டின் சில பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3 ஆயிரத்து 200 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அவர்களில், கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, கொழும்பு, களுத்துறை, கல்முனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.


எனினும், நவம்பர் மாதத்தில் 5 ஆயிரத்து 416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 71 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு பரவல் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் நாட்டின் சில பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.இதற்கமைய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3 ஆயிரத்து 200 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.அவர்களில், கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, கொழும்பு, களுத்துறை, கல்முனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.எனினும், நவம்பர் மாதத்தில் 5 ஆயிரத்து 416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 71 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement