தற்போது தலைமறைவாக உள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார் என்று கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேசபந்து தென்னகோனை கைது செய்ய பல குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எந்த வகையிலும், விசாரணைகளை தாமதப்படுத்த அரசாங்கம் எந்த விருப்பமும் கொண்டிருக்கவில்லை என்று அமைச்சர் உபாலி பன்னிலகே சுட்டிக்காட்டியிருந்தார்.
சட்டத்திற்கு பயந்து தேசபந்து தென்னகோன் மறைந்திருப்பது ஒரு சோகமான சம்பவம் எனவும், அவரை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
தேசபந்து தென்னகோன் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார் – அரசு நம்பிக்கை தற்போது தலைமறைவாக உள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார் என்று கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தேசபந்து தென்னகோனை கைது செய்ய பல குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், எந்த வகையிலும், விசாரணைகளை தாமதப்படுத்த அரசாங்கம் எந்த விருப்பமும் கொண்டிருக்கவில்லை என்று அமைச்சர் உபாலி பன்னிலகே சுட்டிக்காட்டியிருந்தார்.சட்டத்திற்கு பயந்து தேசபந்து தென்னகோன் மறைந்திருப்பது ஒரு சோகமான சம்பவம் எனவும், அவரை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.