• May 11 2024

பனிமூடிய மலைகள், தங்க கடற்கரைகள் - சுற்றுலாப்பயணத் தரவுத்தளமான ட்ரவல் ரைன்கலை கவர்ந்த இலங்கை!

Chithra / Jan 14th 2023, 9:19 am
image

Advertisement

சுற்றுலாப்பயணத் தரவுத்தளமான ட்ரவல் ரைன்கலின் (Travel Triangle) தரப்படுத்தலின்படி, 2023 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறையினர் பார்வையிடக்கூடிய சிறந்த 24 நாடுகளில் இலங்கை முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

பயண முக்கோணத்தின் படி, தங்க கடற்கரைகள், வனவிலங்குகள் நிறைந்த காடுகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் பனிமூடிய மலைகள் என்பன இலங்கையை கவரச்செய்துள்ளதாக அந்தத் தரவுத்தளம் குறிப்பிட்டுள்ளது.


இலங்கைத் தீவின் அழகு மற்றும் பன்முகத்தன்மையைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியமடைகின்றனர்.

இலங்கையின் சிவனொளிப்பாதமலை சிகரத்தின் உச்சியில் இருந்து பார்க்கும் காட்சி பிரமிக்க வைக்கிறது.


சுற்றுலாப்பயணிகள் தங்களின் உடற்தகுதியைப் பொறுத்து, 5 முதல் 6 மணி நேரத்திற்குள் சிவனொளிபாத மலை உச்சியை சென்றடையலாம் என்று ட்ரவல் ரைன்கல் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப் பெரிய பாலூட்டியான நீலத் திமிங்கலத்துடன் கடலில் நீந்துவதற்கான இடமாக இலங்கையை குறித்த தளம் விபரிக்கின்றது.


கிழக்கு கடற்கரைகளில், 2023 இல் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என்றும் அந்த தளம் குறிப்பிட்டுள்ளது.

நடைபயணம், எல்ல பிரதேசத்துக்கான தொடருந்து பயணம், யானை சஃபாரி, தேயிலை தோட்ட சுற்றுலா, இராமாயண பயணம், சிகிரியா குன்று, தம்புள்ளை குகைக் கோயில் எனபனவும் இந்த தளத்தில் சுற்றுலா இடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.


பனிமூடிய மலைகள், தங்க கடற்கரைகள் - சுற்றுலாப்பயணத் தரவுத்தளமான ட்ரவல் ரைன்கலை கவர்ந்த இலங்கை சுற்றுலாப்பயணத் தரவுத்தளமான ட்ரவல் ரைன்கலின் (Travel Triangle) தரப்படுத்தலின்படி, 2023 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறையினர் பார்வையிடக்கூடிய சிறந்த 24 நாடுகளில் இலங்கை முதல் இடத்தைப் பிடித்துள்ளது.பயண முக்கோணத்தின் படி, தங்க கடற்கரைகள், வனவிலங்குகள் நிறைந்த காடுகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் பனிமூடிய மலைகள் என்பன இலங்கையை கவரச்செய்துள்ளதாக அந்தத் தரவுத்தளம் குறிப்பிட்டுள்ளது.இலங்கைத் தீவின் அழகு மற்றும் பன்முகத்தன்மையைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியமடைகின்றனர்.இலங்கையின் சிவனொளிப்பாதமலை சிகரத்தின் உச்சியில் இருந்து பார்க்கும் காட்சி பிரமிக்க வைக்கிறது.சுற்றுலாப்பயணிகள் தங்களின் உடற்தகுதியைப் பொறுத்து, 5 முதல் 6 மணி நேரத்திற்குள் சிவனொளிபாத மலை உச்சியை சென்றடையலாம் என்று ட்ரவல் ரைன்கல் தெரிவித்துள்ளது.உலகின் மிகப் பெரிய பாலூட்டியான நீலத் திமிங்கலத்துடன் கடலில் நீந்துவதற்கான இடமாக இலங்கையை குறித்த தளம் விபரிக்கின்றது.கிழக்கு கடற்கரைகளில், 2023 இல் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என்றும் அந்த தளம் குறிப்பிட்டுள்ளது.நடைபயணம், எல்ல பிரதேசத்துக்கான தொடருந்து பயணம், யானை சஃபாரி, தேயிலை தோட்ட சுற்றுலா, இராமாயண பயணம், சிகிரியா குன்று, தம்புள்ளை குகைக் கோயில் எனபனவும் இந்த தளத்தில் சுற்றுலா இடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement