• May 17 2024

நல்லூரில் குவிந்த பக்தர்கள்...!தங்க மயிலில் ஏறிய முருகன்...! களைகட்டிய மாம்பழத் திருவிழா...! samugammedia

Sharmi / Sep 11th 2023, 10:33 am
image

Advertisement

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் நாளாக திருவிழாவான மாம்பழ திருவிழா (தெண்டாயுதபாணி உற்சவம்) இன்று சிறப்பாக நடைபெற்றது.

இன்று (11) காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகப்பெருமானும் வெளிவீதியுலா வந்தனர்.

இந்த மாம்பழ திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்.

அத்தோடு இன்றைய தினம் முருக பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி இருந்தார்.

இதேவேளை, புராணக் கதையை மையமாகக்கொண்டே ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழா இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



நல்லூரில் குவிந்த பக்தர்கள்.தங்க மயிலில் ஏறிய முருகன். களைகட்டிய மாம்பழத் திருவிழா. samugammedia வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் நாளாக திருவிழாவான மாம்பழ திருவிழா (தெண்டாயுதபாணி உற்சவம்) இன்று சிறப்பாக நடைபெற்றது.இன்று (11) காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகப்பெருமானும் வெளிவீதியுலா வந்தனர்.இந்த மாம்பழ திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்.அத்தோடு இன்றைய தினம் முருக பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி இருந்தார். இதேவேளை, புராணக் கதையை மையமாகக்கொண்டே ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழா இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement