• Oct 04 2024

'தர்மமுழக்கம் 'துடுப்பாட்டத்தொடர் இன்று ஆரம்பம்..!

Sharmi / Oct 4th 2024, 1:38 pm
image

Advertisement

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரபல பாடசாலைகளான கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி மற்றும் முழங்காவில் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) அணிகள் மோதும் 07வது "தர்மமுழக்கம் "துடுப்பாட்டத்தொடர் இன்று  04 மற்றும் நாளை  05 ம் திகதிகளில் தர்மபுரம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

2015ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த போட்டி 2016,2017,2018,2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போதும் நாட்டின் கொவிட் மற்றும் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக 2020,2021,2022ம் ஆண்டுகளில் நடைபெறவில்லை. 

இதுவரை நடைபெற்ற 06போட்டிகளில் தர்மபுரம் மத்திய கல்லூரி 4போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதுடன் முழங்காவில் மகா வித்தியாலயம் 1போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது.

ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைந்திருக்கிறது.

7வது தர்மமுழக்கம் துடுப்பாட்டத் தொடருக்கு தர்மபுரம் மத்திய கல்லூரி அணிக்கு க.ரொபின்சனும், முழங்காவில் மகா வித்தியாலய அணிக்கு அ. சதா மாறனும் தலைமை தாங்கவுள்ளனர்.

இன்றைய முதல் நாள் போட்டியில், நாணயச்சூழற்சியில் முழங்காவில் மகா வித்தியாலய அணியினர் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தனர்.


'தர்மமுழக்கம் 'துடுப்பாட்டத்தொடர் இன்று ஆரம்பம். கிளிநொச்சி மாவட்டத்தின் பிரபல பாடசாலைகளான கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி மற்றும் முழங்காவில் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) அணிகள் மோதும் 07வது "தர்மமுழக்கம் "துடுப்பாட்டத்தொடர் இன்று  04 மற்றும் நாளை  05 ஆம் திகதிகளில் தர்மபுரம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2015ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த போட்டி 2016,2017,2018,2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போதும் நாட்டின் கொவிட் மற்றும் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக 2020,2021,2022ம் ஆண்டுகளில் நடைபெறவில்லை. இதுவரை நடைபெற்ற 06போட்டிகளில் தர்மபுரம் மத்திய கல்லூரி 4போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதுடன் முழங்காவில் மகா வித்தியாலயம் 1போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது.ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைந்திருக்கிறது.7வது தர்மமுழக்கம் துடுப்பாட்டத் தொடருக்கு தர்மபுரம் மத்திய கல்லூரி அணிக்கு க.ரொபின்சனும், முழங்காவில் மகா வித்தியாலய அணிக்கு அ. சதா மாறனும் தலைமை தாங்கவுள்ளனர்.இன்றைய முதல் நாள் போட்டியில், நாணயச்சூழற்சியில் முழங்காவில் மகா வித்தியாலய அணியினர் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தனர்.

Advertisement

Advertisement

Advertisement