யாழ். தீவகம் மண்டைதீவு மகாவித்தியால மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சத்துணவு திட்ட நிதியை பாடசாலையின் அதிபர் மோசடியான வழியில் தம் வசப்படுத்தியமை தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் மதிய நேர சத்துணவுத் திட்ட நிதியை இன்னொருவரின் பெயரில் காசோலை எழுதி பாடசாலையின் அதிபர் கையகப்படுத்தியுள்ளார்.
குறித்த பாடசாலைக்கு வெளிநாட்டுகளிலிருந்து அனுப்பப்படும் நிதியில் மதிய நேர உணவை வழங்கிவிட்டு அதனை அரசாங்கத்தின் நிதியில் வழங்கியதாகக் கணக்கு காட்டி சுமார் 3 இலட்சம் ரூபா நிதியை அவர் கையாடியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உமா மகேஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த சம்பவம் தொடர்பில் உறுதிப்படுத்தியதுடன் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் குறித்த அதிபரை விசாரணை முடியும் வரை தற்காலிகப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் சத்துணவுத் திட்ட நிதியை ஆட்டையைப் போட்டரா ஆதிபர் samugammedia யாழ். தீவகம் மண்டைதீவு மகாவித்தியால மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சத்துணவு திட்ட நிதியை பாடசாலையின் அதிபர் மோசடியான வழியில் தம் வசப்படுத்தியமை தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் மதிய நேர சத்துணவுத் திட்ட நிதியை இன்னொருவரின் பெயரில் காசோலை எழுதி பாடசாலையின் அதிபர் கையகப்படுத்தியுள்ளார்.குறித்த பாடசாலைக்கு வெளிநாட்டுகளிலிருந்து அனுப்பப்படும் நிதியில் மதிய நேர உணவை வழங்கிவிட்டு அதனை அரசாங்கத்தின் நிதியில் வழங்கியதாகக் கணக்கு காட்டி சுமார் 3 இலட்சம் ரூபா நிதியை அவர் கையாடியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உமா மகேஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த சம்பவம் தொடர்பில் உறுதிப்படுத்தியதுடன் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.மேலும் குறித்த அதிபரை விசாரணை முடியும் வரை தற்காலிகப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.