• May 13 2024

கிளிநொச்சியில் காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவு படுத்தும் கலந்துரையாடல்! samugammedia

Tamil nila / Oct 25th 2023, 8:54 pm
image

Advertisement

கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் உள்ள காணிகளை  விடுவிப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவு படுத்தும் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின் வடக்குக்கான இணைப்பாளர் இளங்கோவன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் ,அங்கஜன் இராமநாதன், மற்றும் வனவள திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டு காணிகளை விடுவிக்கும் முயற்சிகளின் சமகால நிலையை ஆராய்ந்தனர்.

அதிகாரிகள் தரப்பிலிருந்து ஜனாதிபதியின்  வட மாகாணத்திற்கான செயலாளர் இளங்கோவன் காணி,  வனபரிபாலன  திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும்  பிரதேச செயலாளர்கள் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

போருக்கு பிந்திய நிலையில் மக்களின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காணிகள்  அவசியமாக தேவைப்படும் நிலையில்  இக் காணிகளை விடுவித்து மக்கள் பாவனைக்காக கையளிப்பது  துறைசார் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்கள் எதிர் கொண்டு வரும் பல்வேறு சிரமங்கள் நெருக்கடிகள் இச் சந்திப்பில் ஆராயப்பட்டன.

இதில் வனபரிபாலன உத்தியோகத்தர்களின் இறுக்கமான நடைமுறையால்  அதிகாரிகள் மீதும் கூடவே அரசின் காணிகளை விடுவிக்கும் அதன்  திட்ட வழிமுறை  மீதும்   சந்தேகங்கள் அதிருப்தியில் வெளிப்படுத்துவதாக இச் சந்திப்பு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவு படுத்தும் கலந்துரையாடல் samugammedia கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் உள்ள காணிகளை  விடுவிப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவு படுத்தும் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின் வடக்குக்கான இணைப்பாளர் இளங்கோவன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் ,அங்கஜன் இராமநாதன், மற்றும் வனவள திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டு காணிகளை விடுவிக்கும் முயற்சிகளின் சமகால நிலையை ஆராய்ந்தனர்.அதிகாரிகள் தரப்பிலிருந்து ஜனாதிபதியின்  வட மாகாணத்திற்கான செயலாளர் இளங்கோவன் காணி,  வனபரிபாலன  திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும்  பிரதேச செயலாளர்கள் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.போருக்கு பிந்திய நிலையில் மக்களின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காணிகள்  அவசியமாக தேவைப்படும் நிலையில்  இக் காணிகளை விடுவித்து மக்கள் பாவனைக்காக கையளிப்பது  துறைசார் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்கள் எதிர் கொண்டு வரும் பல்வேறு சிரமங்கள் நெருக்கடிகள் இச் சந்திப்பில் ஆராயப்பட்டன.இதில் வனபரிபாலன உத்தியோகத்தர்களின் இறுக்கமான நடைமுறையால்  அதிகாரிகள் மீதும் கூடவே அரசின் காணிகளை விடுவிக்கும் அதன்  திட்ட வழிமுறை  மீதும்   சந்தேகங்கள் அதிருப்தியில் வெளிப்படுத்துவதாக இச் சந்திப்பு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement