• Oct 02 2024

கொரோனா பாதிப்புக்கு பின் அதிகரித்துவரும் நோய்கள்! வைத்தியர்கள் அதிர்ச்சித் தகவல் samugammedia

Chithra / Mar 27th 2023, 7:51 pm
image

Advertisement

கொரோனா தொற்று பாதிப்புக்குப் பின்னர் பொதுமக்களிடையே அதிகரித்து வரும் பல்வேறு நோய் தாக்கங்கள் குறித்து அப்போலோ வைத்தியசாலை (Apollo) வைத்தியர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சுவாச மண்டலம் தொடர்பாக அப்போலோ வைத்தியசாலையின் சார்பில் 'நெஞ்சக சிகிச்சைக்கான உச்சி மாநாடு-2023' நேற்றைய தினம் (26.03.2023) சென்னையில் நடைபெற்றுள்ளது.

வைத்தியசாலையின் மூத்த சுவாச மண்டல நிபுணர் ஆர்.நரசிம்மன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், நெஞ்சக சிகிச்சைத்துறை வைத்திய நிபுணர்கள் பலர் கலந்து கொண்டு கோவிட் காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், வயது வந்தோருக்கான தடுப்பூசி, ஆஸ்மா, இன்ப்ளூயன்சா பாதிப்பு, சுவாச நோய்கள் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடியுள்ளர்.


குறிப்பாக கோவிட் தொற்று பாதிப்புக்கு பிந்தைய நிலையில், பெரும்பாலானவர்களுக்கு நுரையீரல் தொற்று அதிகரித்து உள்ளதாகவும், தற்போது பரவும் இன்ப்ளுயன்சா ஏ மற்றும் பி வகைகளின் காரணமாகத் தொற்று பாதிப்பு எளிதில் ஏற்படுவதாகவும் கூறி விவாதித்தனர். இதனால் சிகிச்சை அளிப்பதற்குச் சவாலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நிகழ்வைக் காணொலி காட்சி வாயிலாக ஆரம்பித்து வைத்து அப்போலோ வைத்தியசாலை துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி பேசுகையில், “கோவிட்டின் தாக்கம் நமக்கு பலவற்றை கற்றுக்கொடுத்திருக்கிறது.


எதிர்காலத்தில் வைத்தியத் துறையின் பயன்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. இந்திய வைத்தியத் துறையில் அண்மைக் காலமாக அதிகரித்துவரும் முன்னேற்றங்கள் பாராட்டத்தக்கவை” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சுவாச மண்டல நிபுணர் ஆர்.நரசிம்மன், தொற்றுநோய் பிரிவு மருத்துவர் சுரேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:

பிசிஜி தடுப்பூசியானது பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே போடப்படுகிறது. காசநோய் (டிபி) தடுப்புக்காகப் போடப்படும் இத்தடுப்பூசியானது குழந்தைகளுக்கு 5 வயது முதல் 10 வயது வரை டிபியின் தாக்கம் அதிக அளவு வராமல் இருக்கவும், மூளைக்காய்ச்சல் ஏற்படாமலும் இருக்கவும் உதவுகிறது.


கோவிட் காலத்தில் பிசிஜியை ஒரு கோவிட் தடுப்பூசி பூஸ்டராக பயன்படுத்த முடியுமா எனச் சோதித்துள்ளனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. கோவிட் தொற்று பாதிப்புக்குப் பிறகு சிலருக்கு உடல் சோர்வு, ஞாபக மறதி, சுறுசுறுப்பு இல்லாமை, நுரையீரல் கோளாறு போன்ற பல்வேறு பிரச்சினைகள் சீராக ஏற்படுவதைக் காணமுடிகிறது.

சர்க்கரை நோய் பிரச்சினையும் பரவலாகக் கண்டறியப்பட்டுள்ளது. இன்ப்ளூயன்சாவுக்கு பிறகு மாரடைப்புகளும் அதிகரித்துள்ளன.

ஏனெனில் கோவிட்டால் பாதிக்கப்படும்போது உடலின் மற்ற உறுப்புகளும் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இம்மாநாட்டில் அப்போலோ வைத்தியசாலையின் இயக்குநர் மற்றும் மருத்துவ ஆலோசகர் சத்யபாமா, மூத்த சுவாச வைத்திய ஆலோசகர் காயத்ரி, தொற்றுநோய் பிரிவு வைத்தியர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்புக்கு பின் அதிகரித்துவரும் நோய்கள் வைத்தியர்கள் அதிர்ச்சித் தகவல் samugammedia கொரோனா தொற்று பாதிப்புக்குப் பின்னர் பொதுமக்களிடையே அதிகரித்து வரும் பல்வேறு நோய் தாக்கங்கள் குறித்து அப்போலோ வைத்தியசாலை (Apollo) வைத்தியர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.சுவாச மண்டலம் தொடர்பாக அப்போலோ வைத்தியசாலையின் சார்பில் 'நெஞ்சக சிகிச்சைக்கான உச்சி மாநாடு-2023' நேற்றைய தினம் (26.03.2023) சென்னையில் நடைபெற்றுள்ளது.வைத்தியசாலையின் மூத்த சுவாச மண்டல நிபுணர் ஆர்.நரசிம்மன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், நெஞ்சக சிகிச்சைத்துறை வைத்திய நிபுணர்கள் பலர் கலந்து கொண்டு கோவிட் காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், வயது வந்தோருக்கான தடுப்பூசி, ஆஸ்மா, இன்ப்ளூயன்சா பாதிப்பு, சுவாச நோய்கள் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடியுள்ளர்.குறிப்பாக கோவிட் தொற்று பாதிப்புக்கு பிந்தைய நிலையில், பெரும்பாலானவர்களுக்கு நுரையீரல் தொற்று அதிகரித்து உள்ளதாகவும், தற்போது பரவும் இன்ப்ளுயன்சா ஏ மற்றும் பி வகைகளின் காரணமாகத் தொற்று பாதிப்பு எளிதில் ஏற்படுவதாகவும் கூறி விவாதித்தனர். இதனால் சிகிச்சை அளிப்பதற்குச் சவாலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.நிகழ்வைக் காணொலி காட்சி வாயிலாக ஆரம்பித்து வைத்து அப்போலோ வைத்தியசாலை துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி பேசுகையில், “கோவிட்டின் தாக்கம் நமக்கு பலவற்றை கற்றுக்கொடுத்திருக்கிறது.எதிர்காலத்தில் வைத்தியத் துறையின் பயன்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. இந்திய வைத்தியத் துறையில் அண்மைக் காலமாக அதிகரித்துவரும் முன்னேற்றங்கள் பாராட்டத்தக்கவை” எனத் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து சுவாச மண்டல நிபுணர் ஆர்.நரசிம்மன், தொற்றுநோய் பிரிவு மருத்துவர் சுரேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:பிசிஜி தடுப்பூசியானது பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே போடப்படுகிறது. காசநோய் (டிபி) தடுப்புக்காகப் போடப்படும் இத்தடுப்பூசியானது குழந்தைகளுக்கு 5 வயது முதல் 10 வயது வரை டிபியின் தாக்கம் அதிக அளவு வராமல் இருக்கவும், மூளைக்காய்ச்சல் ஏற்படாமலும் இருக்கவும் உதவுகிறது.கோவிட் காலத்தில் பிசிஜியை ஒரு கோவிட் தடுப்பூசி பூஸ்டராக பயன்படுத்த முடியுமா எனச் சோதித்துள்ளனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. கோவிட் தொற்று பாதிப்புக்குப் பிறகு சிலருக்கு உடல் சோர்வு, ஞாபக மறதி, சுறுசுறுப்பு இல்லாமை, நுரையீரல் கோளாறு போன்ற பல்வேறு பிரச்சினைகள் சீராக ஏற்படுவதைக் காணமுடிகிறது.சர்க்கரை நோய் பிரச்சினையும் பரவலாகக் கண்டறியப்பட்டுள்ளது. இன்ப்ளூயன்சாவுக்கு பிறகு மாரடைப்புகளும் அதிகரித்துள்ளன.ஏனெனில் கோவிட்டால் பாதிக்கப்படும்போது உடலின் மற்ற உறுப்புகளும் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.இம்மாநாட்டில் அப்போலோ வைத்தியசாலையின் இயக்குநர் மற்றும் மருத்துவ ஆலோசகர் சத்யபாமா, மூத்த சுவாச வைத்திய ஆலோசகர் காயத்ரி, தொற்றுநோய் பிரிவு வைத்தியர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement